பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

சோழர் சரித்திரம்

________________

சோழநாட்டின் பழமை காவிரிப்பூம்பட்டினம் எனவும் இரு பெயருடையதாக விளங்குகின்ற பழைய பதி; என்பது அதன் சுருக்கம். தி பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கியது கோடாச் செங்கோற் சோழர் தங் குலக்கொடி கோனிலை திரிந்து கோடை நீடினும் தானிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை தொழுதனள் நிற்பவத் தொன்மூ தாட்டி கழுமிய வுவகையிற் கவாற்கொண் டிருந்து தெய்வக் கருவும் திசைமுகக் கருவும் செம்மலர் முதியோன் செய்த வந்தாள் என்பெயர்ப் படுத்தவிவ் விரும்பெயர் மூதூர் நின்பெயர்ப் படுத்தேன் நீவாழியவென இருபாற் பெயரிய வுருகெழு மூதூர் (பதிகம் 22-32) என்பது காண்க. பழமையும், பெருமையும் வாய்ந்த பரத கண்டத்திலே சோழர் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினம், தனக்கு முந்திய தொன்றின்றித் தானே எவற்றினும் முந்திய பழமையுடைய தென்னும் கருத்தன்றோ தண்டமிழ் ஆசானாகிய சாத்தனாரால் இவ்வளவு அழகாக வருணிக்கப் பெற்றுள்ளது. இளங்கோவடிகளும், சிலப்பதிகார மங்கல வாழ்த்தின் கண்ணே , "பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு வறியாப் பழங்குடி கெழீ இய பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும் நடுக்கின்றி நிலைஇய வென்ப தல்லதை ஒடுக்கங் கூறார் உயர்ந்தோ ருண்மையின் முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே"