பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

சோழர் சரித்திரம்

லன்றோ தமிழ்க்கடலும், வடசொற் கடலும் நிலைகண்டுணர்ந்த பெரும் புலவராகிய பரிமேலழகர்,

“வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரித லின்று”

என்னுங் குறளுரையில், 'பழங்குடி' என்பதற்குச் 'சேர சோழ பாண்டியர் என்றாற்போலப் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டுவருங்குடி' என்று பொருள் விரித்தார்.


2. சோழ நாட்டின் பழமை

னி, சோழநாட்டின் பழமையைத் தனியே விளக்கும் சில மேற்கோளும் இங்கே காட்டுவோம். கடைச்சங்கப் புலவருள் ஒருவரான கூலவாணிகன் சாத்தனாரால் இயற்றப்பட்ட மணிமேகலைக் காப்பியத்தின் பதிகத்தில், முதல் முப்பத்திரண்டு அடிகளில் புகார் நகரின் பழமை மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. சம்புத்தீவின் தெய்வமாகிய சம்பு என்பாள் சம்பாபதியில் (புகாரில்) தவஞ் செய்து கொண்டிருக்கும்பொழுது, அகத்திய முனிவர் தமது கமண்டலத்தினின்றும் கவிழ்த்து விடுத்த காவிரிப்பாவை யானவள் நேர்கிழக்கே சென்று, சம்பாபதியின் பக்கத்தை யடைந்து, அகத்தியரால் அறிவுறுத்தப்பட்டு, சம்புத் தெய்வத்தை வணங்கி நிற்ப, அவள் மிக மகிழ்ச்சியுற்று அருகணைத்து, 'தெய்வகண பிண்டங்களையும் பிரமகண பிண்டங்களையும் பிரமதேவர் படைத்தகாலத்தில் என் பெயருடையதாகச் செய்த பெரும் புகழ்வாய்ந்த இம் மூதூரை இப்பொழுது நின் பெயருடையதாக்கினேன் ; நீ வாழ்வாயாக' என, அன்று தொட்டுச் சம்பாபதி எனவும்,