பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

சோழர் சரித்திரம்

________________

தமிழகத்தின் பழமை “ அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் " என்னும் புறப்பாட்டு அறிவுறுத்தும். பாண்டியன் ஒருவன் பாண்டவர் வெற்றிக்குக் காரணமாயிருந்தான் என்பது, பாரதப்போர், செற்றானுங் கண்டாயிச் சேய் " என்று நளவெண்பாவிற் குறிக்கப்பெற்றுள்ளது. சோழன் ஒருவன் பாண்டவ சேனைக்கு முழு உதவியும் புரிந்தனன் என்னும் செய்தியை, "தாங்கள் பாரத முடிப்பளவு நின்று தருமன் றன் கடற்படை தனக்குதவி செய்த வவனும் என்று கலிங்கத்துப்பரணி எடுத்துக்காட்டுகிறது. இவைகளி லிருந்தே, நூற்றுவர், ஐவர் என்னும் இருதிறத்தாரில் யாவர் பக்கம் நீதி யிருந்திருக்கவேண்டு மென்பதும், பாண்டவரது வெற்றியில் பெரும் பங்குக்குரியவர் யாவர் என்பதும் ஒருவாறு துணியலாகும். இராமாயண காலத்திலும் மூவாசர் நாடுகள் மிக மேன்மையுற்றிருந்தன என்பதற்கு ஆதரவுகள் உள்ளன. பாண்டியாது தலைநகரம் கபாடபுரம் எனப் பெயர் சிறக்கு மாறு, அதன் கோட்டை வாயிற் கதவு பொன்னாற் செய்யப் பட்டு, முத்தாலும் மணியாலும் அலங்கரிக்கப் பெற்று விளங்கிய தனை வால்மீகி தம் இராமாயணத்துக் கூறுவரேல், அக்காலத்தில் தமிழகம் அடைந்திருந்த மேன்மைக்கு வேறென்ன சான்று வேண்டும்? அதற்கு முன்னும் எத் துணைத் தூரம் சென்று பார்க்கினும், மூவேந்தருடைய ஆட்சியின் தொடக்கம் கண்டுபிடிக்கக்கூடியதாயில்லை. அதனா