பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

சோழர் சரித்திரம்

________________

10 சோழர் சரித்திரம் புராணங்களிலிருந்து தெரிகிறது. மாந்தாதாவின் மகனாகிய புருகுச்சனுடைய வழியில் வந்தோரே அரிச்சந்திரன், சகரன், பகீரதன், ரகு, தசரதன், இராமன் முதலானவர்கள். மற்றொரு மகன் அம்பரீடன் என்பான். முசுகுந்தன் வழி எவ்வாறு பெருகிற்று என்பதை விட்டுணு, பாகவத, கூர்ம புராணங்கள் கூறவில்லை. சோழகுல முன்னோரில் முசுகுந்தனும் ஒருவனாகக் கூறப்பட்டதிலிருந்து முசுகுந்தன் வழியினர் சோழரென்று நாம் கருதலாம். முசுகுந்தனுக்கும் தென்னாட்டிற்கும் உள்ள தொடர்பு மிகுதியைப் பின்பு அன்னோன் வரலாறு கூறும் வழிக் காணலாகும். ஒருக்கால் சோழமன்னரைப் பிறப்பால் சூரிய குலத்திலே பிணைக்கக் கருதியோர், சோழர் முன்னோனாய முசுகுந்தனை மாந்தாதாவுக்கு மகனாக்கி விட்டனரோ என்று சிலர் கருதவும் கூடும். எனினும் புராணங்கள் கூறுகிறபடி முசுகுந்தன் சூரிய குலத்து மாந்தாதாவின் மகனே என்றும், அவன் வழியினரே சோழசென்றும் இப்பொழுது வைத்துக் கொண்டு பார்த்தலே சால்புடைத்தாம். பரணி, உலா முதலியவற்றிற் கூறப்படும் சோழகுல முன்னோரைப்பற்றிய செய்திகள் பல சரித்திர எல்லைக்கு அப்பாற்பட்டன. இப் பொழுது உண்மை யென்று நிலை நாட்டவும் காலத்தால் வரையறைப் படுத்துரைக்கவும் அருமையாயிருப்பது கொண்டு அவற்றை யெல்லாம் பொய்ம்மை என்று தள்ளுதலோ, ஆராய்ச்சி இன்றியே எல்லாவற்றையும் முழு உண்மைகளாகக் கொள்ளுதலோ நேரிதன்று. பழைய நூல்களில் புனைந்துரை வகையாற் கூறப்பட்டனவும், சிறிதைப் பெரிதாகவும், ஒன்றைப் பலவாகவும் கூறியுள்ளனவும் இவை இவை என நுண்ணறிவாளர்கட்கு ஒருவாறு புலனாகக் கூடும். அவ்வாறு கூறியனவும் சில நன்மையின் பொருட்டெனின் அவை இகழற் பாலவல்ல. இப்பொழுது உண்மை காணும் நோக்கத்துடன்