பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

சோழர் சரித்திரம்

________________

SK ஆராய்ந்து வெளிப்படுப்பன பழங்கொள்கையுடன் ஒரோவழி மாறுபடின் இவையும் வெறுக்கத் தக்கனவல்ல. இனி, பாணி முதலியவற்றால் அறியப்பட்ட பழைய மன்னருள் மனு, முசுகுந்தன், சிபி, காவி கொணர்ந்தவன், தூங்கெயிலெறிந்தவன், நாக கன்னியை வணங்கவன், கரிகாலன், செங்கணான் என்போர் புறநான பாலிய பழைய தமிழ்ச் செய்யுட்களிற் குறிக்கப்படுதலின் இன்னோர் செய்திகளும், சங்கச் செய்யுட்களால் அறியப்படுகின்ற வேறு சில சோழ மன்னரைப் பற்றிய செய்திகளும் முறையே கூறிவாலாகும். 4. மனு சோழர் குல முன்னவனாகிய இம் மன்னவன் திருவா ரூரிலிருந்து அரசு புரிந்தவன் ; தனது செங்கோன்மையினால், மனுவினால் உண்டாக்கப்பட்ட நீதியைத் தன் பெயராகச் செய்து கொண்டவன் ; மண்ணில் வாழும் உயிர்கட்குக் கண்ணும் ஆவியும் போன்றவன். இக்காவலன் நெடுநாள் மகப்பேறின்றி யிருந்து அருந்தவம் செய்து ஓர் ஆண் பிள்ளையைப் பெற்றான். அவ்விறைமகன் நிறைமதி போல் வளர்ந்து பல கலைகளும் கற்றுணர்ந்து, படைக்கலப் பயிற்சி யிலும், யானை யேற்றம், குதிரை யேற்றம் முதலியவற்றிலும் சிறந்து விளங்கினன். அன்னவன் ஓர் நாள் தேரூர்ந்து வீதியிற் செல்லும் பொழுது ஓர் ஆன் கன்று அவனறி யாதபடி துள்ளி யோடிவந்து தேர்க்காலிற் பட்டு உயிர் துறந் தது. உடனே கன்றை யிழந்த தாய்ப் பசுவானது விரைந்து