12
சோழர் சரித்திரம்
________________
12 சோழர் சரித்திரம் வந்து கதறிப்பதறி வருந்தா நின்றது. அந்நிகழ்ச்சியைக் கண்ட அரசிளங்குமரன் எய்திய துயரம் அளவிடற்பாலதன்று. அறிவு கலங்கித் தேரினின்றும் வீழ்ந்தவனாய், அலறுகின்ற ஆவினை நோக்கி உயிர் பதைத்துச் சோர்வான் ; நிலத்தில் உயிர் துறந்து கிடக்கும் கன்றை நோக்கிப் பெருமூச்செறிந்து இரங்குவான் ; மலர் தலை யுலகம் காக்கும் மனுவெனும் எங் கோமானுக்கு இப்பழி வந்தெய்த யான் ஒருவன் பிறக்க வற்றேனே என்று தன்னை வெறுப்பான் ; இவ்வாறு வருந்தி இதற்குச் செய்யலாவதோர் கழுவாய் உளதெனில் எந்தை இதனை அறிதற்கு முன்பே செய்வேன் என்றெண்ணி, மறை வல்ல அந்தணர் இருப்பிடம் அடைந்தான். கன்றை யிழந்த பசுவும் சும்மா இருந்திலது. அளவற்ற துயரத்துடன் அங்கு மிங்கும் ஓடியது ; அலறியது ; அரசனுடைய கோயில் முற்றத்தை யடைந்து அங்கே தூங்கியதாகிய மணியினைக் கொம்பாற் புடைத்தலும் செய்தது. என்றும் அசை யாத நாவினையுடைய அம் மணியின் ஓசை பழிப்பறை முழக் கெனவும், பாவத்தின் ஆர்ப்பெனவும் அரசன் செவிகளிற் சென்று புக்கது. உடனே நெஞ்சம் துணுக்குற்றோடி வந்தான் ; நிகழ்ந்ததனை அறிந்துளோர் கூறக் கேட்டான் ; ஆவின் உறு துயர் கண்டான் ; தானும் துயாக் கடலில் மூழ்கிக் கரை காணானாயினான். அத் தன்மைய னான அரசன் பின்பு ஒருவாறு தெளிந்து அமைச்சர்களோடும் சூழ்வுற, அவர்கள் இவ்வழுவினை ஆய்ந்து கழுவாய் உஞற்று தல் தகவெனக் கூறினர். அதனை உறுதியென்று கொண்டி லன் ; அமைச்சர் என்ன கூறியும் மன்னன் கொள்கையை மாற்றக் கூடவில்லை. கன்றை யிழந்த பசுவினது துயாத் தைத் தானும் எய்து வதே கடனெனத் துணிந்தானாய், மக னைத் தேர்க்காலில் வைத்தூருமாறு ஓர் அமைச்சனுக்குக் கட்டளையிட்டான். அன்னவன் சென்று அது செய்யானாய்த்