பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

சோழர் சரித்திரம்

________________

மனு 13 தன்னுயிர் துறக்கவே, அரசன் தானே சென்று தன் அரு மருந்தனைய ஒரே மகனைத் தேர்க்காலிற் கிடத்தி ஊர்ந்தனன். அப்பொழுதே கருணையங்கடலாகிய சிவபெருமான் உமை யம்மையாருடன் இடப வாகனத்திலே தோன்றி அரசனுக் குக் காட்சியளித்து அருள்புரிவாராயினர்; ஆன்கன்றுடன் அரசகுமாரனும் அமைச்சனும் உயிர் பெற்றெ முந்தனர் ; தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர் ; யாவர்களும் களிப் புற்றனர். இவ்வரலாறு தெய்வ மணக்குஞ் செய்யுள் பாடவல்ல சேக்கிழார் பெருமானால் பெரிய புராணத்தில் மிக அழகாகக் கூறப்பெற்றுளது ; அதன் பெருமையை அறிதற்கு அரச னுடைய நீதியைப் புலப்படுத்தும் சில பாடல்களை இங்கே தருதும் : " மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்க்காக் குங்காலைத் தான தனுக் கிடையூறு தன்னாற்றன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர் தம்மால் ஆனபய மைந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ." என்மகன்செய் பாதகத்துக் கிருந்தவங்கள் செய்விசைந்தே அன்னியனோ ருயிர்கொன்றா லவனைக்கொல் வேனானால் (தை தொன் மனு நூற்றொடை மனுவாற்றுடைப் புண்டதெனும் வார்த் மன்னுலகிற் பெறமொழிந்தீர் மந்திரிகள் வழக்கென்றான்." ஒருமைந்தன் றன் குலத்துக் குள்ளானென் பதுமுணரான் தருமந் தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன் மருமந் தன் றேராழி யுறவூர்ந்தான் மனுவேர்தன் அருமந்த வாசாட்சி யரிதோமற் றெளிதோதான்.'