பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

சோழர் சரித்திரம்

________________

14 சோழர் சரித்திரம் இனி, கறவையின் பொருட்டு மகனை முறை செய்த இவ் வரலாற்றினைச் சயங்கொண்டாரும் ஒட்டக்கூத்தரும் முறையே, " அவ்வ ருக்கன்மக னாகி மனு மேதினிபுரம் தரிய காதலனை யாவினது கன்று நிகரென் செவ்வருக்கமும் வியப்ப முறை செய்த கதையும் " எனவும், "சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரின் மைந்தனை யூர்ந்த மனுவோனும் எனவும், பரிதி மைந்தனாகிய வைவச்சுத மனுவுக்கே உரியதாக்கிக் கூறுகின்றனர். அவன் பொன்னி நாட்டிலிருந்து அரசு புரிந்த ஓர் சென்னியா மென்பதே சேக்கிழார் கருத்தும், இளங்கோவடிகள் முதலிய பண்டைச் சான்றோர் கருத்து மாகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய பழைய இலக்கியங்களில் மனு, மனு நீதி, மனு நூல் என்னும் பெயர்கள் யாண்டும் காணப்பட வில்லை. அவைகள் வேதத்தைப்பற்றிக் கூறுகின்றன. அவற்றில் மறை யென்றும், கேள்வி யென்றும் வேதம் கூறப்படுகின்றது. அதற்குப் பல நூற்றாண்டுகளின் பின் பெழுந்த தமிழ்த் திருமுறைகளில் நான்மறை, ஆறங் கம் என்பன பலவிடத்துக் கூறப்பட்டுள. திருமுறை கள் சிலவற்றில் ஆகமங்களும் கூறப்படுகின்றன. அவற் றுள், ஓரிடத்தும் வடமொழி மிருதிகளைப்பற்றிய குறிப்பு யாதொன்றுங் காணப்படவில்லை. பிற்காலத்தனவாகிய பிங்கல முதலிய நிகண்டுகளில் மனு முதலிய பதினெட்டு