17
சோழர் சரித்திரம்
________________
முசுகுந்தன் மாங்களில் வாழும் இயல்புடைய ஓர் முகக்கலையானது அவ் வில்வ மரத்தின் இலைகளைப் பறித்து அம்மையப்பர் திருமேனி மறையுமாறு போட்டுக்கொண்டிருந்தது. அது கண்டவளவில் அம்மைக்குக் குரங்கின்மீது சீற்றமுண்டாயிற்று. பார் கருணைத் தடங்கடலாய பெருமாள் அம்மையாரின் சீற்றத்தை மாற்றி யருளி, அம்முசுவிற்கு நாவணர்வரித்து 'நீ புரிந்த பூசனையுவந்தனம் ; வில்வத்தழை கொண்டு இங்கனம் எம்மைக் குற்றமறப் பூசித்தமையால், நீ, பகலவன் குலத்திற் றோன்றிப் பார் முழுதும் அரசாளுவை' என்று அருள் புரிந்தார். அங்கனம் அருள் பெற்ற முசுவும் பெருமானது திருவருளை என்றும் மறவாமைப் பொருட்டு, தான் அரசனாய காலத்தும் முசு முகத்துடன் இருக்க வரம் பெற்றுக் கருவூரின் கண்ணே அரசர் குலத்திலே தோற்றஞ் செய்தது. பெற்றோர்கள் முசுமுகத்துடன் தோன்றிய தம் குழந்தைக்கு முசுகுந்தன் எனப் பெயரிட்டுச் சிறப்பியற்றி, இளம் பருவத்திலேயே சகல கலைகளையும் கற்குமாறு செய்து, அரசவுரிமையை அவனிடம் ஒப்புவித்துவிட்டுத் தவமியற்றச் சென்றனர். முசுகுந்த மன்னனும் சிவபெருமான் திருவரு ளைக்கணப்பொழுதும் மறத்தல் இலனாய், அளியும் ஆற்றலும் மிக்கு, மன்னுயிர்களைத் தன்னுயிர்போல் ஓம்பி முறை வழுவாது ஆட்சி நடாத்தி வருவானாயினன். இப்படி இருக்கும் நாளில், முருகப்பெருமானானவர் சூரபன்மனைச் சங்கரித்துவிட்டுத் திருப்பரங்குன்றமெய்தித் தெய்வயானையாரைத் திருமணம் புரியும் செய்தியைத் தேவேந்திரனுடைய ஒற்றால் அறிந்து, அவண் சென்று திருமணத்தினைத் தரிசித்துக் குமாரக் கடவுளின் திருவருள் பெற்றுத் திரும்பினன். சோ . 2