பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

சோழர் சரித்திரம்

________________

16 சோழர் சரித்திரம் தும் அஞ்சாது அவனது தவற்றினை எடுத்துக்காட்டி இடித் துரைப்பான் புக்கதும், அதினும், தன் ஊர்ப்பெயர் கூறும் பொழுதே, 'என்னூர் நின்போலும் நீதியற்ற மன்னரால் ஆளப்படுவதன்று' என்பது போதா ஓர் பசுவுற்ற துயரினை யும் சகிக்கலாற்றாது தன் அருமந்த மகனைத் தேர்க்காலில் வைத்தூர்ந்து நீதி செலுத்திய மன்னனால் ஆளப்படுவது காண் என்பதி' என்றுரைத்ததும் எவ்வளவு பெருமித உணர்ச்சியை விளைவிப்பன பாருங்கள்! பின்னது, புகார் நகரிலிருந்த கிள்ளிவளவன், தன் மக னாகிய உதய குமானென்பான் மணிமேகலை என்னும் தவ மகளைக் காதலித்து ஓர் விஞ்ஞையனால் வெட்டுண்டிறந்தான் என்பது தெரிந்து அவனை உடனே புறங்காடடைவிக்குமாறு கூறியது. தன் மகன் புரிந்த தீமை பிறவேந்தர் செவியை யடையு முன் அவனை ஈமத்தேற்றுக என்கிறான்! மகனை முறை செய்த மன்னவன் வழியில் வந்து, தன் குலத்திற்கு ஓர் சிறுமறுவும் உளதாகாது காத்தல் கருதிய இம் மன்னனது மாட்சியை என்னென்றுரைப்பது! 5. முசுகுந்தன் மாந்தாதாவின் மக்கள் மூவரிலொருவனாகப் பாகவத முதலிய புராணங்களிற் கூறப்பெற்றுள்ள இம்மன்னனைக் குறித்துக் கந்தபுராணத்தால் அறியலாகும் செய்திகள் பின் வருவன : பண்டொரு காலத்தில் வெள்ளியங்கிரியில் வானளாவிய பூங்காவிலே ஓர் வில்வ மரத்தடியில் சிவபெருமான் உமா தேவியாரோடும் எழுந்தருளி யிருந்தனர். அப்பொழுது