பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

சோழர் சரித்திரம்

________________

22 சோழர் சரித்திரம் தூக்கத்தினின்றெ முந்து அவனை நோக்கினான். அவ்வளவில் யவனன் விளிந்து சாம்பராயினன். அவ்வாறு அவன் விளிந்தமைக்குக் காரணம் யாதெனில், முசுகுந்தச் சக்கா வர்த்தியானவன் தேவாசுர யுத்தத்தில் தான் வானவர்க்குத் துணையாய் நின்று அவுணர்களை மடித்த காலையில் அமரர்கள் மகிழ்வுற்று நினக்கு என்ன வரம் வேண்டும்?' என்று வினவ, அவன், தான் போர்த்தொழிலால் நெடுநாள் உறக்க மின்றியிருந்தமையால் களைப்புற்று, 'யான் நெடுங்காலம் துயிலும்படி வரம் கொடுமின்' எனக் கேட்டனன். அன்ன வரும் அப்படியே வரங்கொடுத்து நின்னைத் துயிலினின்' றெழுப்புவோன் யாவனாயினும் அவன் சாம்பராவன் ' என்று கூறிவிடுத்தனர். இதுவே காலயவனன் மாண்டமைக்குக் காரணம் என்க. பின்பு, முசுகுந்தனானவன் கண்ணனைப் பார்த்து 'நீ யார்?' என்று வினவி, 'யான் யதுகுலத்து வசுதேவர் மைந்தன்' என்று அவன் கூறக்கேட்டு, 'இருபத் தெட்டாம் சதுர்யுகத்தில் துவாபரத்தின் முடிவில் யது குலத்திலே திருமால் அவதரித்தருளுவன்' என்று முன்பு விருத்த கார்க்கிய முனிவர் தனக்குச் சொல்லியிருப்பதை நினைவு கூர்ந்து, அவன் பகவனாகிய திருமாலே என்று துணிந்து துதித்தனன். அப்பொழுது கண்ணபிரான் முசுகுந்த மன்னனை நோக்கி நீ விரும்பிய உத்தம லோகங் களையடைந்து, திப்பிய போகமெல்லாம் நுகர்ந்து, முடிவில் ஓர் பெருமை வாய்ந்த குலத்திலே பழம்பிறப்புணர்ச்சி யுடையவனாய்த் தோன்றி முத்தியடைவாய் ' என்று அருளிச் செய்தனன். அங்கனம் அருள்பெற்ற முசுகுந்தனும் குகையி னின்றும் வெளிப்போந்து குறிய வடிவுடன் திரிகிற மனித ரைப் பார்த்து, கலியுகம் வந்து விட்டதென்று தெரிந்து கொண்டு தவம்புரிதற் பொருட்டுக் கந்தமாதனம் என்னும் குன்றத்தை அடைந்தனன் என்பது.