பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

சோழர் சரித்திரம்

________________

முசுகுந்தன் 23 முசுகுந்தன் என்பவன் பேராற்றலும் பெரும் புகமும் வாய்ந்த தென்னாட்டு மன்னர்களில் ஒருவன் என்பதும், அவன் பூர்வ புண்ணியத்தால் அளவுகடந்த சிவ பத்தியும், தவயோகசித்தியும் கைவரப் பெற்றவன் என்பதும் மேற் காட்டிய கதைகளினின்றும் வடித்தெடுக்கற்பாலவாய உண்மை களாம். இனி, இம்மன்னன் தேவர்கள் பொருட்டாக அவுணர் களோடு போர் புரிந்த செய்தி சில வேறுபாட்டுடன் சிலப்பதி காரம் முதலியவற்றினின்றும் அறியக் கிடக்கின்றது. ஒரு காலத்தில் கலுழனானவன் விண்ணுலகத்தை யடைந்து அங்கே சேமத்தில் வைக்கப்பட்டிருந்த அமிழ் இந்திரன், யான் சென்று வருங்காறும் இந்நகரைக் காப்போர் யார் என நினைத்தலும், முசுகுந்த மன்னன் எழுந்து 'யான் பாதுகாத்தல் கடன்' என மொழிந்தான். புரந்தான் அது கேட்டு மகிழ்ந்து ' இது நின்வழி நிற்பதாக' என ஓர் பூதத்தை நிறுத்திச் சென்றனன். அக்காலை அவுணர்கள் பெருந்திரளாகக் கூடிவந்து பொருது, போரில் ஆற்றாது நிலை கெட்டோடியவர்கள், பின்பு ஒருங்கு கூடிச் சூழ்ச்சி செய்து, இவனை வஞ்சத்தாலன்றி வெல்லுதல் அரிதெனத் துணிந்து, பேரிருட்கணை யொன்றை விடுத்தார்கள். அதனால் எங்கணும் இருள் சூழலும், முசுகுந்தன் செய்வதறியாது நெஞ்சம் திகைத்து நிற்புழி அப்பூதமானது ஓர் மந்திரத்தை யருள, அவன் அது பெற்று வஞ்சனையைக் கடிந்து அவுணர் படை யைக் கொன்று குவித்து நின்றனன். மீண்டு வந்த இந்திரன் நிகழ்ந்தவற்றையறிந்து, உற்றவிடத்து உதவி புரிந்த அப் பூதத்தினை அம்மன்னனுக்கே மெய்க்காவலாகுமாறு பணிக்க, அஃது ஆங்கு நின்றும் போந்து காவிரிப்பூம்பட்டினத்தில்