பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

சோழர் சரித்திரம்

________________

24 சோழர் சரித்திரம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரு பகுதி களுக்கும் இடையேயுள்ள நாளங்காடியில் (காலைக் கடைத் தெரு) இருந்து பலியுண்டு வருவதாயிற்று. இதனை, 'கடுவிசை யவுணர் கணங்கொண் டீண்டிக் கொடுவரி யூக்கத்துக் கோநகர் காத்த தொடுகழன் மன்னர்க்குத் தொலைந்தன ராகி நெஞ்சிருள் கூர நிகர்த்துமேல் விட்ட வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் திருந்துவே லண்ணற்குத் தேவ னேவ இருந்து பலி யுண்ணு மிடனுங் காண்கும்." என்னும் சிலப்பதிகாரக் கடலாடு காதைப் பகுதியானும், அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை, மேற்கோள்க ளானும் அறிக. மேற்கோளில், "காவ லழித்துச் சேவல்கொண் டெழுந்த வேட்கை யமுதம் மீட்க வெழுவோன் என்று இந்திரன் பொன்னகரை விடுத்துச் சென்றதன் காரணம் குறிப்பிடப்பட்டுளது. சேவல் என்பது பறவையின் ஆணுக்கெல்லாம் பொதுப்பெயராயினும், தன் தாயின் அடிமைத்தனத்தைப் போக்குதற்குக் கருடனானவன் தேவ லோகம் புக்கு அமுதினை எடுத்துச் சென்றனன் என்று மகாபாரதம் முதலியவற்றிற் கூறப்படு தலால் சேவல் என் பதனைக் கலுழனென்றே கொள்ளல் வேண்டும். தன் தாய் மாற்றாளுக்கு அடிமையாயினாள் என்பதை அறிந்தவளவில் ஆண் மகனாய கலுழன் சிறிதும் பொறுக்கலாற்றானாய், உடனே எவ்வாற்றானும் தாயின் அடிமையைப் போக்குவ தென்று உறுதி செய்து கொண்டு, அதன் பொருட்டு நில வுலகில் எவராலும் அடைய வொண்ணாத தேவாமிர்த மாகிய மருந்தினைக் கொணர்ந்து தாயை மீட்டனன் ; தாயின்