பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

சோழர் சரித்திரம்

________________

முசுகுந்தன் அடிமையைப் போக்கியவனே எஞ்ஞான்றும் கடவுளு னிருந்து பணி செய்யும் பேற்றையும், அதனால் பெரிங் திருவடி ' என்னும் பெயரையும் எழுதுதற்குரியனாயினான்.. இனி, புகார் நகரில் முற்கூறிய காளங்காடிப் பூதயன்றி மற்றொரு பூதமும் உள்ளது. அதுக்கு தெருக்கள் கடு மிடத்தில் உள்ளதாகலின் சதுக்கப்பூரம் எனப்படும் படிகா ரில் உள்ள ஐவகை மன்றங்களில் பூத சமும் ஒன்று. அம் மன்றங்களைப் பற்றிய அரிய செய்திகளை இந்திரவிழ வூரெடுத்த காதையா னறியலாகும். இனி, முசுகுந்தன் துய ரைப் போக்கியதான நாளங்காடிப் பூதமானது காவிரிப் பூம் பட்டினத்தில் இந்திரவிழாச் செய்யப்படாதொழியின் வெகுண்டு துன்பம் விளைவிக்கும் என்று கூறப்படுகின்றது. இதனை, "வான்பதி தன்னுள் கொடித்தேர்த் தானைக் கொற்றவன் றுயரம் விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின் மடித்த செவ்வாய் வல்லெயி றிலங்க இடிக்குரல் முழக்கத் திடும்பை செய்திடும் " என்னும் மணிமேகலை விழாவறை காதையான் அறிக. முசு குந்தன் தேவருலகத்தைப் பாதுகாத்த செய்தி, பொருது றைத்தலை புகுந்து முசு குந்தனிமையோர் புரம டங்கலும் அரண்செய்து புரந்த புகழும் " என்று கலிங்கத்துப் பரணியிற் குறிக்கப்பெற்றுள்ளது. திரு வாரூரில் தியாகேசப் பெருமான் முசுகுந்தனால் கொண்டு வரப்பட்ட செய்தியை, "பூவசம் செய்து விண் ணொடு புணர்பகை போக்கிய வோர் கோவசம் செய்வள ராரூர்த் தியாகர் " என்று திருவாரூர் ஒருதுறைக்கோவை கூறுகின்றது.