உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

சோழர் சரித்திரம்

________________

6. சிபி சந்திர குலத்திலே சிபி எனப் பெயரிய மன்னன் ஒரு வன் உளனென்பது புராண இதிகாசங்களால் அறியப்படு கிறது. அவன் யயாதியின் மக்களுள் ஒருவனாகிய அணுவின் வழியில் வந்த உசீநான் புதல்வனாவான். சிபி, சூரிய குலத்தவ னென்றும், சோழர்களின் முன்னோனென்றும் சங்கத்துச் சான்றோசாய நல்லிசைப் புலவர்களாலும், இடைக்காலத்தே தோன்றிய சயங்கொண்டார், சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர் முதலிய புலவர் பெருமக்களாலும் பலவிடங்களிலே கூறப்பட்டிருக்கின்றது. ஆகலின், சூரிய குலத்துச் சிபியும் வேறு சந்திர குலத்துச் சிபியும் வேறென்றே கொள்ளுதல் வேண்டும். பல அரசர்கள் ஒரே பெயர் தரித்திருப்பதைப் புராணங்களிற் காணலாகும். சங்க இலக்கியங்களில் சோழர் குல முன்னோரின் மாட் சியை விளக்க நேர்ந்துழி யெல்லாம் சிபி எனப் பெயரிய மன்னன் ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகின்றான். இவ் வேந்தர் பெருமானைக் குறித்து மகா பாரதத்தில் கூறப் பட்டிருக்கும் வாலாற்றின் சுருக்கம் பின் வருவது : தரும புத்திரர் பேரறிவாளரான பாட்டனாரைப் (பீஷ் மர்) பார்த்து அடைக்கலம் புகுந்த உயிரைப் பாதுகாத்தலி னால் உளதாம் பயனை வினவ, பீஷ்மர் கூறுகின்றார் : தரும் நந்தன! சாணாகத தருமத்தின் மேன்மையைக் குறித்து முன்பு நிகழ்ந்ததொரு சரித்திரத்தை நினக்குக் கூறுவேன் கேட்பா யாக : காண்டற்கினிய வனப்புவாய்ந்த ஓர் புறாவானது ஓர் பருந்தினால் கவரப்படுமெல்லையில் சிபி எனப்படும் மன்னர்