பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

சோழர் சரித்திரம்

________________

பிரானைச் சரண் புகுந்தது. அம் மன்னன் தன் மடியில் அச்சத்துடன் வந்து வீழ்ந்த அம்பறாவினைக்கண்டு தேற்றி. ' நீ சிறிதும் அஞ்சற்க ; உலகினர் பாதுகாத்தற்கென்றே அமைந்துள்ள என்பால் அணுகிய நின்னைப் பற்றும் பொருட்டு எவனும் மனதில் நினைத்தற்கும் வல்லவகோன்; நின்னைக் காப்பது பொருட்டாக இத்தோ ஆட்சியையும் என் உயிரையும் விட்டுவிடவேண்டு மென்றாலும் அங்கனமே செய்வேன் ; நீ கவலையுறல் வேண்டா ' என்று கூறினான். அவ்வளவில் அப்புறாவினைத் துரத்திவந்த பருந்தானது அவ் வேந்தனைப் பார்த்து 'அரசே! இப்புறாவானது எனக்கு உணவாகத் தெய்வத்தால் ஏற்படுத்தப் பட்டது ; இதனைப் பிடிப்பதற்காக யான் விடாது தொடர்ந்து பெரிதும் வருந்திப் பற்றுவான் ஆயினேன் ; இப்பொழுது நீ இதனைக் காப்ப தென்பது சிறிதும் தக்கதன்று. இதன் இறைச்சி குருதி கொழுப்பு முதலிய அனைத்தும் என் உணவிற்கு அமைந் தவை ; நானோ இப்போது கொடிய பசியாலும், நீர் வேட்கை யாலும் வருந்துகின்றேன் ; இனிச் சிறிதும் ஆற்றியிருக்க வொண்ணாது; ஆகலின் இதனை விட்டுவிடுக; மேலும், நின் நாட்டில் வாழும் மக்களைப் புரப்பதே நின் கடமையாகும்; வானிலே பறக்கும் பறவைக்கு நீ தலைவன் அல்லை ; வானத்தி லும் நின் ஆற்றலைச் செலுத்துவதென்பது விரும்பத் தக்க தன்று ; நினக்குரிய பொருளைக் கவர்வோர் திறக்திலே நின் ஆண்மையைக் காண்பிப்பதே முறையாகும்; அன்றியும், இப்புறாவின்றிறத்தில் அறத்தினைக் கருதுகின்ற நீ பசியால் வருந்துகின்ற என்னை மட்டும் புறக்கணித்திடுதல் பொருந் துமோ?' என்று இங்கனம் கூறி முறையிட்டது. அதனைக் கேட்டு வியப்புற்ற வேந்து முனியாகிய சிபி, பருந்தை நோக்கி, ' அடைக்கலம் புகுந்த இதனை யான் ஒருபொழுதும் கைவிடு தல் செய்யேன் ; நீ நின்பசி படங்கவேண்டில் காட்டெருமை,