பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

சோழர் சரித்திரம்

________________

28 சோழர் சரித்திரம் பன்றி முதலியவற்றின் இறைச்சியில் எதையேனும் ஏற்றுக் கொள்வாயாக' என்றனன். என்னலும் பருந்து 'யான் வேறு எதனையும் தின்பதில்லை ; எனக்கு நெடுங்காலமாகக் கடவுள் பால் ஏற்படுத்தப் பெற்றிருக்கும் உணவு இதுதான்; பருந்து கள் புறாக்களை உண்ணுவதே எக்காலத்தும் உள்ள இயற்கை என்பதனையறியாயோ? ஒருக்கால் நினக்குப் புறாவின்பால் அத் துணை அன்பிருக்குமாயின் நின் தசையினை அப்புறாவின் அளவு நிறுத்து இப்பொழுதே கொடுப்பாயாக ' என்று கூறிற்று. அது. கேட்டதும் மன்னன் பெருமகிழ்ச்சியுற்று நீ இங்ஙனம் கூறியதே எனக்குப் புரிந்த பேருதவியாகும்; நீ விரும்பிய வாறு இப்பொழுதே செய்வேன்' என்று சொல்லித் தன் தசைகளை அரிந்து தலையில் வைத்து நிறுக்கலானான். அப் பொழுது அந்தப்புர மகளிர், அமைச்சர், பணியாளர் முத லிய யாவரும் ஓடிவந்து கதறுவாராயினர். அரசனோ எதற் கும் சலியாதவனாய்த் தன்னுடைய கைகளினும் , துடைகளி லும், விலாப்புறங்களிலும் உள்ள தசைகளையெல்லாம் அரிந் தரிந்து தராசில் நிரப்பினன் ; நிரப்பியும் அவை புறாவின் நிறைக்கு ஒத்திருக்கவில்லை. அதுகண்ட, அருளின் பிறந்தக மாயுள்ள அம் மன்னன் தானே தலையில் ஏறுவானாயினன். அப்பொழுது இந்திரன் முதலிய இமையவர் யாவரும் அங்கு வந்து சூழ்ந்துகொண்டு பாராட்டினார்கள் ; தேவ துந்துபிகள் முழங்கின ; கற்பகமலர் மழை பொழிந்தன. அரச விருடி யாகிய சிபி இத்தகைய சிறந்த புண்ணியத்தால் அப்பொழுதே வானவூர்தியில் ஏறி, என்றும் அழிவில்லாததான துறக் கத்தை யடைந்தனன். தரும நந்தன! நீயும் இப்பெற்றிய வான சிறந்த அறங்களைச் செய்யக்கடவை ; அன்புள்ளோ ரையும் அடுத்தோரையும் காப்பாற்றி, எல்லா உயிர்களிடத் தும் இரக்கம் வைத்திருப்பவன் வீட்டுலக இன்பத்தைப் பெற்று விளங்குவன் ; பெரியோர்களால் ஆசரிக்கப்பட்டு