பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

சோழர் சரித்திரம்

________________

29 வந்த நல்லொழுக்கத்தை யுடையவன் எதைத்தான் அடைய மாட்டான்? சிபி என்னும் வேந்தன் தன் செய்கையால் மூவு லகத்தாரும் கொண்டாடும் புகழையும், உயர் கதியையும் எய்தினன் ' என்று கூறி, அவன் போல் சரண்புகுந்த உயி ரைப் பாதுகாக்கும் எவனும் அத்தகைய பேற்றினை நிச்சய மாகப் பெறுவன் என்று திருவாய் மலர்ந்தருளினர்.* இம் மன்னனைச் சோதித்தற்பொருட்டு இந்திரன் பருந் தாகவும், அக்கினி புறாவாகவும் இங்கனம் வந்தனர் என் றும் கதைகள் வழங்கா நிற்கும். இவ்வாசனது வரலாற்றி லிருந்து இவன் பேரருள் வாய்ந்தவனென்பதும், அடைக் கலங் காத்தலாகிய சீரிய அறத்தைக் கடைப்பிடித்தவனென் பதும் வெளியாகின்றன. இராம சரித்திரம் முழுதும் இவ் வறத்தினையே எவற்றினும் சிறப்பாக விளக்க லுறுகின்றது. விபீடணன் அடைக்கலத்தைக் கூறும் பகுதியில் இதனை நன்கு காணலாகும். அவ்விடத்தில் இராமபிரான் இச் சிபி வேந்தனை எடுத்துக் காட்டாகக் கொண்டு இவ்வறத்தினை வற் புறுத்துரைப்பதாகக் கம்பர் கூறும் பாட்டு இது : “பிறந்தநாட் டொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி மறந்தநா ளுண்டோ வென்னைச் சரணென வாழ்கின் றானைத் துறந்தநாட் கின்று வந்து துன்னினான் சூழ்ச்சியாலே இறந்தநாளன்றோ வென்று மிருந்தாா ளாவதென்றான்" இனி, சோழர் சிபியின் வழியில் வந்தமையால் செம்பி யர் எனப்பட்டனசென்று சிலர் கூறுவர்; சிபி என்பதிலிருந்து சைப்பியர் என்னும் சொல் உண்டாகி, அது செம்பியர் எனத் திரிந்தது என்பது அன்னோர் கருத்து. இங்கனம் தாம்

  • ஸ்ரீமத் M. V. இராமானுஜாச்சாரியார் அவர்கள் பதிப்பித்த வியாசபாரத மொழிபெயர்ப்புக் காண்க.