பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

சோழர் சரித்திரம்

________________

"உடல் கலக்கற வரிந்து தசை யிட்டு மொருவன் ஒரு துலைப் புறவொ டொக்கநிறை புக்க புகழும் " என்று கலிங்கத்துப் பரணியிலும், " உலகறியக், காக்குஞ் சிறுபுறவுக் காக்களிகூர்ந்து தூக்குந் துலைபுக்க தூயோனும் " என்று விக்கிரம சோழனுலாவிலும், இங்கனமே ஏனயுலாக் களிலும் இவன் தான் புரிந்த செயற்கருஞ் செயல் பற்றிப் பாராட்டப்படுகின்றான். "துலையிற் புறவி னிறையளித்த சோழ ருரிமைச் சோணாடு " என்று சேக்கிழார் கூறுகின்றார். இராமபிரான் குல மேன்மை யைக் கௌசிக முனிவர் வாக்கினில் வைத்துக் கம்பர் கூறும் அழகிய பாட்டு இங்கு நோக்கற்பாலது. அது, "இன்னுயிர்க்கு மின்னுயிரா யிருநிலங்காத் தாரென்று பொன்னுயிர்க்குங் கழலவரை யாம்போலும் புகழ்கிற்பாம் மின்னுயிர்க்கு நெடுவேலா யிவர்குலத்தோன் மேற்பறவை மன்னுயிர்க்குத் தன்னுயிரை மாறாக வழங்கினனால் " என்பது.