பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

சோழர் சரித்திரம்

________________

7. காந்தன் இவன் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த ஓர் சோழ மன்னன் ; அகத்திய முனிவர்பால் மிக்க பத்திமையுடை யோன். இவன் வேண்டுகோளுக்கிரங்கியே அகத்தியர் தமது கமண்டலத்திலிருந்த காவிரியை நதிவடிவாக நிலத்திற் பெருகச் செய்து சோழநாட்டை வளமுறச் செய்தனர் என்ப. இதனை, "செங்கதிர்ச் செல்வன் றிருக்குலம் விளக்கும் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமா முனிவன் அகத்தியன் றனாது காகங் கவிழ்த்த காவிரிப் பாவை 3 என்னும் மணிமேகலைப் பதிகத்தான் அறிக. அகத்தியர் மேருவிலிருந்து தென்னாட்டிற்கு வரும்பொழுது, கங்கையா ருழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு வந்தா சென்று தொல்காப்பியப் பாயிர வுரையில் நச்சினார்க்கினியர் கூறுகின்றார். அவர் இமயத்தினின்றும் தெற்கில் வருங்கால், திருக்கைலையில் இருந்த காவிரியைச் சிவபெருமான்பாற் பெற்றுக் கமண்டலத்திலே தரித்துக்கொண்டு வந்து கொங்கு நாட்டிற் றங்கியிருக்கும் பொழுது, சீகாழிப்பதியிலே தவ மியற்றிய தேவேந்திரன் வேண்டுகோட்கிரங்கி விநாயகப் பெருமானானவர் காக்கை யுருவெடுத்து அகத்தியாது கமண் டலத்தைக் கவிழ்த்துக் காவிரியைப் பெருகச் செய்தன ரென்று கந்தபுராணம் கூறுகின்றது. இங்ஙனம் சில வேறு பாடுகள் காணப்படினும் காவிரி அகத்தியர் கமண்டலத்தி னின்றும் போந்ததென்பது பொதுவாக ஒத்துக்கொள்ளப் படுகின்றது. இனி, காந்தன் எனப் பெயரிய இம்மன்னன், அரசர் குலத்தை வேரறுத்தலையே தனக்கு விரதமாகக் கொண்ட