பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

சோழர் சரித்திரம்

________________

கரிகாலன் 45 செல்லுகையில் இமயமலை குறுக்கிட்டுத் தடுத்தமையின் ' என் நசை யொழிய இது தடுத்தது ' என முனிந்து அதன் பிடரிடத்தே தனது புலியைப் பொறித்து மீண்டான் என்றும், மீளுகையில், பகை நண்பு இலனாகிய வச்சிர நாட்டாசன் ஓர் முத்துப் பந்தரைத் திறையாகத் தந்தனன், பகைவனாகிய மகத நாட்டாசன் பொருது தோற்றுப் பட்டி மண்டபமொன்றைத் தந்தனன், நட்பாளனாகிய அவந்தி வேந்தன் ஓர் வாயில் தோரணத்தை உவந்தளித்தனன் என்றும், அவ்வேந்தர்களின் முன்னோர் புரிந்த உதவிக்குக் கைம்மாறாக மயனால் நிருமித்துக் கொடுக்கப்பட்ட அப்பந்தர் முதலியன வளவர் பெருமானாற் புகார் நகரின்கண் கொணர்ந்து வைக்கப்பட்டன என்றும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இமயமலையிற் புலி பொறித்தலாகிய செய்தி " இலங்குவேற் கரிகாற் பெருவளத் தோன் வன்றிறற்புலி யிமயமால் வரைமேல் வைக்கவேகு வோன் எனப் பெரிய புராணத்திலும் கூறப்பெற்றுளது. கரிகாலன் இமயமலையைச் செண்டால் அடித்துத் திரித்தனன் என்றும், அச்செண்டு கச்சிப்பதியிலே காமகோட்டம் காவல் பூண்டிருந்த சாத்தனார் என்னும் தெய்வத்தால் அளிக்கப்பட்ட தென்றும், "செண்டு கொண்டுகரி காலனொரு காலி லிமயச் சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப் பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற் பாய்புலிப் பொறி குறித்தது மறித்த பொழுதே - கலிங்கத்துப்பரணி "கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவன் மெச்சி யினி திருக்கு மெய்ச்சாத்தன்-கைச்செண்டு கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான் செம்பொற் கிரிதிரித்த செண்டு