பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

சோழர் சரித்திரம்

________________

சோழர் சரித்திரம் காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணி வாயில் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய மொய்வலி யறுத்த ஞான்றைத் தொய்யா வழுந்து பார்ப்பினும் பெரிதே என்று கூறப்படு தலாலும் பெறப்படுகின்றன. வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் இவனுடன் போர் குறித்து வந்த ஒன்பது மன்னர்கள் இவனெதிரிற் செல்லவும் அஞ்சினராய் ஒரு பகலிலே தங்கள் குடைகளைப் போட்டு ஓடினர் என்பது, 125-ம் அகப்பாட்டில், "பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் சூடா வாகைப் பறந்தலை யாடுபெற ஒன்பது குடையும் நன்பக லொழித்த பீடின் மன்னர் போல ஒடுவை மன்னால் வாடை நீ யெமக்கே ) என்று கூறப்படுதலாற் போதருகின்றது. தென்னவனும், ஒளியர், அருவாளர், வடவர், குடவர், பொதுவர், இருங் கோவேள் என்பாரும் இவனால் வெல்லப்பட்டு ஒடுங்கினர் என்று பட்டினப்பாலை கூறுகின்றது. இங்கனம் தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டை யடுத்த இடங்களிலுமிருந்த அரசர்களையும் குறுநில மன்னர்களையும் வென்று அடிப் படுத்திய கரிகாலன் போர் விருப்பங்கொண்டு வட நாட்டிற்குச் சென்றான். தமிழகத்திலே தன்னுடன் பொருவாரைப் பெறாத திருமாவளவன் போரிலே பெருவிருப்புடையனாகலின் வடதிசையிற் பகைவரைப் பெறலாமெனக் கருதி, வாளும் குடையும் வீரமுரசும் நாட்கொண்டு, இத் திசையிலாயினும் நான் பகைவரைப் பெறவேண்டுமெனத் தெய்வத்தை வணங்கி அத்திசை நோக்கிச் சென்றான் என்றும், அங்கனம்