பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

சோழர் சரித்திரம்

________________

கரிகாலன் 43 பின்பு வலியறிந்து ஏவல் கேட்டனவும் ஏவல் செய்யாத பகைவர் தேயம் கவற்சி பெருகவும் இளஞாயிறு கடலின் மேலே கதிர்களைப் பரப்பி விசும்பிடைச் சென்றாற்போலப் பிறந்து தவழ்தல் கற்ற நாள் தொடங்கித் தோள் வலியாலே பகைவென்று நாடுகாத்தவன் என்றும், சிங்கக் குட்டியானது பாலுண்டல் கைவிடாத இளம் பருவத்தே முதல் வேட்டையிற் களிற்றினைக் கொன்றாற் போலச் சோனும் பாண்டியனும் ஒரு களத்தே படும்படி வெண்ணி என்னும் ஊரிலே தாக்கியவன் என்றும் கூறுகின்றது. இதிலிருந்து இவனது கன்னிப்போர் வெண்ணிப்போர் என்பது பெறப்படுகின்றது. இவன் மலையை அகழ்க்கு வன், கடலைத் தூர்க்குவன், வானை வீழ்க்குவன், வளியை மாற்றுவன் என உலகம் மீக்கூறும்படித் தான் கருதிய போர்த்துறைகளை யெல்லாம் பொருது முடித்தானென்று பட்டினப்பாலை கூறுகின்றது. இவன் வெண்ணிப்பறந்தலையில் சேரமான் பெருஞ் சோலாதனோடு பொருது அவனை வென்றான் என்பதும், சேரலாதன் அப்போரிலே தனக்குண்டாகிய புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்தான் என்பதும், 55-ம் அகப் பாட்டு 65, 66-ம் புறப்பாட்டுக்கள் ஆகியவற்றாலும், அப் போரின்கண் சேரனோடு பாண்டியனொருவனும் தோல்வியுற்றான் என்பது, "இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட் கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன் 21 என்னும் பொருநராற்று அடிகளாலும், அவ்வேந்தர்களோடு வேளிர் பதினொருவர் தோற்றனர் என்பது, 246-ம் அகப் பாட்டில்,