பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

சோழர் சரித்திரம்

________________

சோழர் சரித்திரம் குலத்துக்குத் தக்க விச்சைகள் கற்பதற்கு முன்னே செம்பாக முளவாம்' என்னும் அதன் பழைய உரையாலும் இம் மன்னன் இளமையில் முதுமைக்கோலம் பூண்டு முறை செய் தமை பெறப்படுகின்றது. இச்செய்தி மணிமேகலையுள்ளும், " இளமை நாணி முதுமை யெய்தி உரை முடிவு காட்டிய வரவோன்' எனத் தண்டமிழ் ஆசானாகிய சாத்தனாரால் சோழர் குலத்தா ரின் நீதியை அறிவுறுத்தற்கு எடுத்துக் காட்டப்பெற்றது. இஃதும், முன் குறித்துப் போந்த சிறையைக்கடந்த செய்தியும் இவ்வரசன் மிக இளையனாயிருந்தபொழுதே யாவரும் வியக்கும் படியான உயர் நீதியும் பெருவீரமும் உடையனாயிருந் தமையைத் தெரிவிக்கும் சிறந்த சான்றுகளாம். இவன் நாங்கூர் வேளிடை மகட் கொண்டான் என் பதும், இவன் தந்தையாகிய உருவப்பஃறேர் இளஞ் சேட் சென்னி அமுந்தூர் வேளிடை மகட் கொண்டான் என்பதும், மன்னர் பாங்கிற் பின்னோராகும் என்னும் தொல்காப்பியச் சூத்திர வுரைக்கண் நச்சினார்க் கினியர் உரைத்தலாற் பெறப்படுகின்றன. அங்கு அது செவியாறற் செய்தியாகவே அவராற் குறிப்பிடப்படுகின்றது. இளஞ்சேட் சென்னி அழுந்தூர் வேளிடை மகட் கொண் டான் என்பதிலிருந்து அவள் வயிற்றுப் பிறந்தோனே கரிகாலன் எனத் துணிதல் இயலாது. என்னை? அரசர்க்கு மனைவியர் பலர் உளராகலின் என்க. இனி, இவ்வேந்தனது வீரத்தைச் சிறப்பித்து, பொருந ராற்றுப்படையானது, இவன், முருகன் போலும் சீற்றமும் உட்கும் பொருந்தியவனென்றும், கூற்றுவனைக் காட்டிலும் மிக்க வலியுடையனென்றும், தன் வலியறியாத பகைவர்