பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

சோழர் சரித்திரம்

________________

கரிகாலன் குக் காலன் போன்றவன் ' என் தாம் வேண்டியவாறு பொருளுரைத்தனர். கரிகால்வளவன் முதலிய தொடர்களில் கால் என்றே இருத்தலையும் அவர் நோக்கிற்றிலர். அகநானூதி றிலே பல பாட்டுக்களில் 'கரிகால் என்றே இவன் கூறப்படும் கின்றான் ; இவன் தன் நாட்டை வள கேடுத்திய பெருமை நோக்கி, கரிகால்வளவன், கரிகாற் பெருவரைக்கான், திருமா வளவன் எனப் பின்பு வழங்கப்பெற்றானாதல் வேண்டும். பெருவீரனாகிய இவ்வேந்தன் பெயரை இவன் வழியிலே பின் வந்தார் சிலர் தரித்துக்கொள்ளுதல் இயல்பாகலின் அன்னாரை நோக்கி இப்பெயர்க்கு வேறு காரணங் கூறவேண்டுவதும் இன்று. பராந்தகன் மகனாகிய கரிகாலனை யானை எடுத்துச் செல் லும் பொழுது அவன் தாய் அவனது உள்ளங்காலிலே கரிக் கோடு கீறினள் எனச் செவ்வந்திப் புராணம் கூறுவது கரி காலன் என்னும் பெயரை வைத்துக் கற்பித்ததென்றே தோன்றுகிறது. இனி, "உரை முடிவு காணா னிளமையோ னென்ற நரைமுது மக்க ளுவப்ப - நரைமுடித்துச் சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமற் பாகம் படும் " என்னும் பழமொழிச் செய்யுளாலும், ' தம்முள் மறுதலை யாயினார் இருவர் தமக்கு முறைமை செய்யவேண்டி வந்து சில சொன்னால் அச்சொல்லின் முடிவுகண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம்பாத இளமைப் பருவத்தானென்று இகழ்ந்த நரைமுது மக்கள் உவக்கும் வகை நரை முடித்து வந்து, முறை வேண்டி வந்த இருதிறத்தாரும் சொல்லிய சொற்கொண்டே ஆராய்ந்தறிந்து முறை செய்தான் கரிகாற் பெருவளத்தானென்னுஞ் சோழன் ; ஆதலால் தத்தம்