பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

சோழர் சரித்திரம்

________________

40 சோழர் சரித்திரம் இவ்வாண்டகை சிறையைக் கடந்து வெளியேறுவன் என்பது உணர்ந்த வன்கண்மையுடைய பகைவர் இவனைக் கோறல் கருதிச் சிறையின்கண் தீக்கொளுத்தினர் எனவும், இவன் அத்தீயினை அஞ்சாது மிதித்து வெளிப்போந்தனன் எனவும், அதனால் இவனது கால் கரிந்தமையின் இவனது வீரத்தைப் பாராட்டி யாவரும் கரிகால் எனவே இவனுக் குப் பெயர் கூறிவந்தனரெனவும் கருதப்படுகிறது. பொருந ராற்றுப் படையின் ஈற்றிலே காணப்படும், முச்சக் கரமும் அளப்பதற்கு நீட்டியகால் இச்சக்கரமே யளந்த தால் - செய்ச்செய் அரிகால்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன் கரிகாலன் கானெருப் புற்று " என்னும் வெண்பாவிலே காலில் நெருப்புற்றமை கிளந் தோதப் பெற்றது. நச்சினார்க்கினியரும் 'கண்ணாற் கண் ணிக் கரிகால் வளவன்' என்னும் பொருநராற்றுப்படை யடிக் குப் பொருள் கூறுமிடத்தே 'முச்சக்கரமும் என்னுங் கவி யானே கரிகாலாதல் உணர்க என்றனர். "சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும் பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால் செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை உயிருடையா ரெய்தா வினை 11 என்னும் பழமொழி வெண்பாவாலும், அதன் உரையாலும் இவன் தீயாற் சுடப்பட்டு உய்ந்தமையும், இரும்பிடர்த் தலையார் என்பவர் இவனுக்கு அம்மானாதலும், இவன் செங்கோலோச்சுதற்கு அவர் துணையாயிருந்தமையும் பெறப் படுகின்றன. இவ்வாலாற்றுண்மை யுணராத சிலர் கரிகாலன் என்பதனை வடசொற்றொடராகக் கொண்டு யானைப்படைக்