பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

சோழர் சரித்திரம்

________________

கரிகாலன் 39 அரசுக்குரியானை எடுத்து வருவதென்பது சிறிது தெய்வத் தன்மை கலந்த செய்திபோற் றோன்றுகிறது. இனி, இவன் அரசாளத் தொடங்கிய பொழுது முன்பே இந்நாட்டினைத் தாம் கைப்பற்றி ஆளக் கருதியிருந்த பிறர் சிலர் இவனுடன் பகைமை கொண்டு காவால் இவனைப் பற்றிச் சிறைப்படுத்திவிட்டனர் என்பதும், மிக்க இளம் பருவத்தினனாகிய இவன் அச்சிறையகத்தே சிலகாலம் இருந்து வளர்ந்து செவ்வி நோக்கிச் சிறைக்கோட்ட மதிலை இடித்து வெளிப்போந்து எதிர்ந்த பகைவரைக் கொன்று, சென்று அரசு கட்டிலேறினான் என்பதும் பட்டினப்பாலை முதலியவற்றாற் பெறப்படுகின்றது. கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப் பிறர்பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கை யானை பிடிபுக் காங்கு நுண்ணிதி னுணர நாடி நண்ணார் செறிவுடைத் திண்காப் பேறி வாள் கழித்து உருகெழு தாயம் ஊழி னெய்தி என்று பட்டினப்பாலை கூறுகின்றது. புலிக்குட்டி கூட்டிலே அடையுண்டிருந்து வளர்ந்தாற்போலப் பகைவரது காவ லிடத்தே யிருந்து வலியும் பெருமையும் முற்றி, தனது கூரிய அறிவாலே இதுவே செயற்பாலது என ஆராய்ந்து, ஓர் மதவேழமானது தன்னை அகப்படச் செய்த குழியினைக் கோட்டினாற் கரைகள் இடியும்படி தூர்த்துவிட்டுப் பெண் யானையின் பக்கல் சென்றாற்போல அப்பகைவருடைய மதி லைக் கடந்து, வாளாற் பகைவரைக் கொன்று, உட்குப் பொருந்திய தன் அரசுரிமையை முறையாலே பெற்றனன் என்பது இதன் பொருள்.