38
சோழர் சரித்திரம்
________________
38 | சோழர் சரித்திரம் பிறக்கு முன்னரே தந்தை விண்ணுலகெய்தினன் ஆகலின் அப்பொழுதே அரசுரிமை யெய்திப் பிறந்தனன் என்று கூறு வது ஏற்புடைத்தாகத் தோன்றுகிறது. "கழுமலத் தியாத்த களிறுங் கருவூர் விழுமியோன் மேற்சென் றதனால் விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுத லரிது" என்னும் பழமொழி வெண்பாவாலும், 'கழுமலமென்னும் ஊரின் கண்ணே பிணித்து நின்ற களிறும், கருவூரின் கண்ணே யிருந்த கரிகால் வளவன் கடிது இளையனாயினும் அவன் சிறப்புடையனாதலால் அவன் மேற் சென்று தன்மிசை யெடுத்துக்கொண்டு அரசிற் குரிமை செய்தது' என்னும் அதன் உரைப் பகுதியாலும், இவன் இளைஞனாயிருந்த பொழுது தனது நாட்டிலன்றி வேறிடத்திற் கரந்து வதிந்து வந்தனனென்பதும், அப்பொழுது சோணாட்டிலே அரசுரிமை பற்றிக் குழப்பம் ஏற்பட அமைச்சர் முதலாயினார் அக்கால வழக்கப்படி, யானையை விடுத்து அரசனைத் தேடுமாறு துணிந்து கழுமலம் என்னும் ஊரிலிருந்த பட்டத்து யானை யைக் கட்டவிழ்த்து விட்டனரென்பதும், அக்களிறு கருவூரை யடைந்து ஆங்கிருந்த கரிகாலனைத் தன் முதுகின் மேல் எடுத்து வைத்துக்கொண்டு வந்து அவனை அரசிற்குரியனாக் கிற்று என்பதும் பெறப்படுகின்றன. உறையூர் மண்மாரி பெய்து அழிந்தகாலை பராந்தகன் மகனாகிய கரிகாலனை அமைச்சர்கள் இங்ஙனமே யானையை விடுத்துக் கொணர்ந்தன சென்று செவ்வந்திப் புராணம் கூறுகின்றது. ஒருவனோடு இயைபுடைய வரலாறு பெயரொற்றுமையால் உண்மை யுணர் மாட்டாது மற்றொருவனுக் குரியதாக்கிக் கூறப்பட்டிருக்க லாம் என்று கருதுவது இழுக்காகாது. யானை சென்று