பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

சோழர் சரித்திரம்

________________

கரிகாலன் 37 தலையில் ஒன்பது மன்னரை ஒரு பகலில் வென்றனன் ; ஒரு கால் இமயமலை வரையிற் சென்று வடநாட்டாசர் பலரை வென்று திரைபெற்று, மேலும் வடக்கே செல்லாவாறு அம் மலை குறுக்கிட்டுத் தடுத்தமையின் அதனைச் செண்டாலாடித் துத் திரித்து அதன் தலையிலே தனது புலிக்கொடியை நிறுத்தி மீண்டனன் ; காடு கெடுத்து நாடாக்கி நீர்நிலைகளைப் பெருக்கி நாட்டை வளம்படுத்தினன் ; வாணிகத் துறையை மேம்படுத்தினன் ; கைத்தொழில்களைப் பேணி வளர்த் தனன் ; பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ண னார்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் அளித்து அப் பாட்டினைப் பெற்றனன் என்பது. இனி இவனது பிறப்பினைக்குறித்து ஓர் கதை கூறுவர். அது, இவன் தாய் கருவுயிர்த்தற்கு வருந்துகையில் ஓர் அறி ஞர் வந்து 'இன்னும் ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறப் பின் பெரு நலம் உண்டாகும் ' என்று கூறக்கேட்டு, அவளும் அந்நற்பொழுது வருங்காறும் கால்கள் மேலாக நின்று பின் குழவியை ஈன்றனள் என்பது. இவன் மீது முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில் "தாய்வயிற் றிருந்து தாயமெய்திப் பிறந்து' என்பதற்கு தான் பிறக் கின்ற காலத்துப் பிறவாதே நல்ல முகூர்த்தம் வருமளவும் தாயுடைய வயிற்றிலேயிருந்து பிறக்கையினாலே அரச வுரிமை யைப் பெற்றுப் பிறந்தென்றார் ' என உரையாளர் கூறுவது காண்க. கோச்செங்கட் சோழர் இங்கனம் பிறந்தனரென்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியலாவது. செவ்வந்திப் புராணம் பராந்தகன் மகனாகிய (ஒரு) கரிகாலனுக்கு இச் செய்தியை உரிமையாக்குகின்றது. இவ்வாறாய கதைகளில் ஒன்றை யுட்கொண்டே நச்சினார்க்கினியரும் இங்கனம் பொருள் கூறினாராவர். ஆனால் தாய் வயிற்றிலிருந்து