உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

சோழர் சரித்திரம்

________________

9. கரிகாலன் இம் மன்னனுடைய வரலாற்றை அறிதற்குக் கருவியாக இருப்பன பொருநராற்றுப்படை , பட்டினப்பாலை, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பழமொழி முதலி யனவாகும். அவற்றான றியப்படும் இவன் வரலாற்றின் சுருக் கம் : இவ்வேந்தன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன் ; நாங்கூர் வேளிடை மகட் கொண்டோன் ; இரும் பிடர்த்தலையாரை அம்மானாகவுடையவன் ; இவன் மகள் ஆதி மந்தி என்பாள் ; இவன் இளமைப் பருவத்துப் பிறராற் சுடப்பட்டு உயிருய்ந்தனன்; அப்பொழுது கால் கரிந்தமை யால் கரிகாலன் எனப் பெயரெய்தினான் ; கருவூரிலிருக்கை யில் கழுமலம் என்னும் ஊரிலிருந்த யானையாற் கொண்டு வாப்பட்டு அரசாட்சிக்குரியனாய், பின் பகைவராற் சிறைப் படுத்தப்பெற்று மதிலைக் கடந்து பகைவர் சேனையை வென்று மீண்டு முறையாலே அரசுரிமை யெய்தி, உறையூரிற் கோயி லும் மதிலும் முதலியன அமைத்து அதனை அரசிருக்கை யாகக் கொண்டனன் ; காவிரிப்பூம் பட்டினத்தையும் தலை நகராக்கி வீற்றிருந்தனன் ; தன்னிடம் வழக்குக் கொணர்ந்த முதியோர்கள் தன்னை நோக்கி 'இளைஞனாகிய இவன் உரை முடிவுகாணான்' எனக் கருதிய தனைக் குறிப்பாலுணர்ந்து, தான் நரைமுடித்து முதுமைக்கோலந் தாங்கிவந்து அம்முதி யோர் உவக்கும்படி அவர்கள் சொற்கொண்டே முறை செய் தனன் ; வெண்ணிப்பறந்தலையில் பதினொரு வேளிரொடு இரு பெரு வேந்தர் அழியப் பொருதனன் ; வாகைப்பறந் -*இவ்வாசனைப்பற்றி, திருவையாற்று அரசர் கல்லூரித் தமிழ் ஆசிரியர் ஆக இருந்த காலஞ்சென்ற .. உலகநாதப் பிள்ளையவர்களால் சோழன் கரிகாற் பெருவளத்தான் என்னும் பெயருடன் ஓர் நூல் எழுதப் பெற்றுளது.