பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

சோழர் சரித்திரம்

________________

தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் 35 விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள் மேலோர் விழைய விழாக்கோ ளெடுத்த நாலேழ் நாளினும் நன்கினி துறைகென அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது என்னும் மணிமேகலை விழாவறை காதையால் விளங்குகிறது. இம்மன்னன் வானத்தில் அசைந்துகொண்டிருந்த மதிலை அழித்த செய்தியானது, " ஒன்னார் , ஒங்கெயிற் கதவம் உருமுச்சுவல் சொறியும் தூங்கெயி லெறிந்த தொடி விளங்கு தடக்கை நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன் எனச் சிறுபாணாற்றுப்படையிலும், "வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பிற் அங்கு மெயிலும் தொலைத்தலால் ' எனப் பழமொழியிலும், தூங்கெயின் மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை எனச் சிலப்பதிகாரத்தும், "தேங்கு தூங்கெயி லெறிந்த வவனும் எனப் பரணியிலும், "கூடார் தம், தூங்கு மெயிலெறிந்த சோழனும் " என உலாவிலும் குறிக்கப்பட்டுள்ளது. இங்கனம் சோழர் குலத்து முன்னோன் புரிந்த செய்தி பின்னோர் பலர்க்கும் ஏற்றிக் கூறப்படுவதிலிருந்து இச்செயல் எவ்வளவு அருமை யுடையதாகக் கருதப்பட்டதென்பது விளங்கும்.