பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

சோழர் சரித்திரம்

________________

34 சோழர் சரித்திரம் "மேக்குயாக், கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியத் தள்ளும் திரைப்பொன்னி தந்தோனும் " என விக்கிரமசோழனுலாவிலும் குறிக்கப் பெற்றவன் இம் மன்னனே யாதல் வேண்டும். 8. தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் இம் மன்னனது பெயரின் பொருள் வானத்தில் அசைந்துகொண்டிருந்த பகைவரது மதிலை யழித்த வீரவளை யணிந்த தோளையுடைய சோழன் என்பதாகும். இவனால் அழிக்கப்பெற்ற அரண் மூன்றென்பது சிலப்பதிகாரத்தால் வெளியாகின்றது. சோழர் குலத்தாரது வீரத்திற்கு இவ் வேந்தன் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றான். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடுகின்ற ஓர் புலவர், "சார்தல், ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறல் தூங்கெயி லெறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின் அடுதல் நின் புகழு மன்றே " - புறம் என்று கூறுதல் காண்க. இவன் அகத்திய முனிவருடைய கட்டளையால் காவிரிப்பூம் பட்டினத்தில் முதன் முதல் இந்திரனுக்கு விழாச் செய்தனன் என்பது, உலகத் திரியா வோங்குயர் விழுச்சீர்ப் பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய ஒங்குயர் மலயத் தருந்தவ னுரைப்பத் தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்