49
சோழர் சரித்திரம்
________________
கரிகாலன் 49 இனி இவ்வேந்தனால் வாணிகம் எவ்வளவு மேன்மை யடைந்திருந்த தென்பது காவிரிப்பூம் பட்டினத்தின் ஏற்று மதி இறக்குமதி முதலியன குறித்துப் பட்டினப்பாலையும் சிலப்பதிகாரமும் கூறுவனவற்றால் அறியலாகும். புகார் நகரின் மருவூர்ப்பாக்கத்து நடுவிடத்தும், கடலோரத்திலும், 'நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் ) சீனம் முதலிய இடங்களினின்றும் வந்த கருப்பூரம் பனிநீர் குங்குமம் முதலிய அரிய பொருள்களும், மற்றும் பெருமை யுடைய பல பொருள்களும் நிலத்தின் முதுகு நெளியும்படி திரண்டு பொருந்தியிருக்கும் என்றும் ; கடலோரத்தில் பண்டசாலையினின்றும் கடலில் ஏற்றுதற்காகவும் கடலி னின்றும் பண்டசாலையில் இறக்குதற்காகவும் சரக்குகளின் பொதிகள் சோழனுடைய புலி முத்திரையிடப்பட்டு வரம் பின்றி மலைபோலத் திரண்டு கிடக்கும் என்றும் ; அப்பொதி களின் அளவு முதலியவற்றிற்கு ஏற்றபடி ஆபக்கணக்கர்கள் இரவு பகல் ஓயாது சுங்கம் கொள்வார்கள் என்றும் பட்டினப்பாலை கூறுகின்றது. கூலம் விற்கும் மறுகுகளில் இன்ன சாக்கு ஈண்டு உளதென்று அறிவிக்கும் அடையாள மாகக் கொடியெடுத்திருத்தலும், கப்பல்கள் திசைமயங்கிச் செல்லாது அழைக்கும் கலங்கரை விளக்கம் (Lighthouse) கடலோரத்தில் நிறுவப்பட்டிருத்தலும் போல்வன சிலப்பதிகாரத்திலும், புகார் நகரின் வணிகர்களும், வேறு சோ . 4 |