பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

சோழர் சரித்திரம்

________________

50 | சோழர் சரித்திரம் பல தேயங்களினின்றும் அங்கு வந்த பலமொழி பேசும் வணிகர்களும் கலந்து இனிதுறைதலும், அங்கே வாணிகஞ் செய்வோர் பிறர் பொருளையும் தம் பொருளையும் ஒப்ப நாடித் தாம் கொள்ளுஞ் சாக்கைக் கொடுக்கும் பொருட்கு மிகையாகக் கொள்ளாமலும், கொடுக்குஞ் சாக்கை வாங்கும் பொருட்குக் குறையக் கொடாமலும் இலாபத்தை வெளிப் படையாகச் சொல்லிக் கொடுத்து நல்ல வாணிகம் நடாத்து தலும் பட்டினப்பாலையிலும் கூறியிருத்தலினின்று அற்றை நாள் அங்கு நடைபெற்ற வாணிகத்தின் நாகரிக முறையும், அறந்திறம்பாமையும் புலனாகின்றன. இனி, காவிரிப்பூம்பட்டினத்தில், "பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருக (மாக்களும்) கஞ்ச காரரும் செம்பு செய் குநரும் மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும் பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும் துன்ன காரரும் தோலின் றுன்னரும் கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப் பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும் " முதலாயினோர் மறுவின்றி விளங்கினர் எனச் சிலப்பதி காரம் கூறுதலினின்று பல்வகையான கைத்தொழில்களின் பெருக்கம் புலனாகின்றது. இனி, திருமாவளவனாற் பல நகரங்கள் சிறந்த முறை யில் நிருமிக்கப்பட்டனவாகும் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. "பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் கோயிலொடு குடிகிறீஇ