பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

சோழர் சரித்திரம்

________________

கரிகாலன் வாயிலொடு புழையமைத்து ஞாயில்தொறும் புதைநிறீஇ என அவன் உறையூரைப் புதுப்பித்து செய்தி பட்டினப்பாலை யிற் சுருங்கக் கூறப்பெற்றுளது. காவிரிப்பூம் பட்டினமும் கரி காலனால் நன்கு திருத்தி யமைக்கப்பட்ட முக்கவே வேண்டும்.. Mus காவிரியின் வடகரையில், கடலையடைந்திருந்த இப் பட்டினம் மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம் என இரு கூறாயிருந்தது. இவற்றுள், கடலோரத்திலிருந்த மருவூர்ப் பாக்கத்திலே கலங்கரை விளக்கமும், பண்டசாலைகளும், சுங்கச்சாவடிகளும், கண்ணைக்கவரும் அழகுடைய யவனர் இருக்கைகளும், மற்றும் வேறு பல தேயங்களினின்றும் வாணிகப் பொருட்டால் வந்தவர்களின் இருப்பிடங்களும், வண்ணம் சுண்ணம் சாந்தம் பூ புகை விரை என்பன விற் போர் இடங்களும், சந்தனம் அகில் பட்டு பவளம் முத்து பொன் என்பனவும் பொற்பணிகளும் விற்கும் மறுகுகளும், பட்டுச்சாலியர், வெண்கலக்கன்னார், செம்பு கொட்டிகள், தச்சர், கொல்லர், சித்திரகாரிகள், சிற்பாசாரிகள், உருக்குத் தட்டார், இரத்தினப்பணித்தட்டார், தையற்காரர், கிழியா னும் கிடையானும் பூ வாடாமாலை பொய்க்கொண்டை முதலியன செய்வோர், குழலினும் யாழினும் இசைபாடும் பாணர் முதலாயினோர் இருப்பிடங்களும் இருந்தன ; பட்டினப்பாக்கத்திலே அரசவீதியும், தேரோடும் வீதியும், ஆவண வீதியும், வணிகர் மறையோர் காணியாளர், மருத்து வர், சோதிடர் என்பாரின் தனித்தனி மறுகுகளும், சூதர், மாகதர், நாழிகைக் கணக்கர், கூத்தர், குயிலுவர், கணிகையர் முதலாயினாரின் வேற்றுமை தெரிந்த இருப்பிடங்களும் இருந்தன ; மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத்தச்சரும் தண்டமிழ்வினைஞர் தம்