பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

சோழர் சரித்திரம்

________________

52 Gen . சோழர் சரித்திரம் மொடுங் கூடி இயற்றிய மண்டபம் முதலியவற்றையுடைய அரசன் கோயில் நடுவண் இருக்க, அதனைச் சூழ்ந்து கடும்பரிகடவுநர், களிற்றின் பாகர், நெடுந்தேர் ஊருநர், கடுங்கண் மறவர் என்பார் பரவியிருக்கும் இருப்பிடங்கள் இருந்தன ; தேவ கோட்டங்களும், அம்பலங்களும், பொதியில்களும், கலைக்கழகங்களும், வெள்ளிடைமன்றம், இலஞ்சிமன்றம், நெடுங்கல் மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம் என்னும் மன்றங்களும், இலவந்திகை, உய்யானம், சம்பாதிவனம், கவோவனம், உவவனம் என்னும் பூஞ்சோலை களும் அங்கே விளங்கின ; அரசன் அரண்மனையை யடுத்த எந்திரவாவியையுடைய இலவந்திகை என்னும் சோலை யின் மதிற்புறத்தினின்றும் காவிரிக்குப் புதுப்புனலாடப் போம் பெருவழி இருமருங்கும் நிழன் மாச்சோலை சூழ்ந் திருந்தது ; மருவூர்ப்பாக்கத்திற்கும் பட்டினப்பாக்கத்திற் கும் இடையே நிரைபடச்செறிந்த சோலை மரங்களின் கால் களே தூணாகக் கட்டப்பட்ட கடைகளையுடைய நாளங்காடி (காலைக் கடைத்தெரு) ஒன்று இருந்தது என, சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலைகளால் அறியப்படுதலினின்று புகார் நகரின் அமைப்பும் சிறப்பும் ஒருவாறு புலனாகும். இனி, காஞ்சிமா நகரமும் கரிகால் வேந்தனால் நன்கு. திருத்தியமைக்கப்பட்டதென்று, " என்று முள்ள விக் நகர்கலி யுகத்தி லிலங்கு வேற்கரி - காற்பெரு வளத்தோன் வன்றி றற்புலி யிமையமால் வரைமேல் வைக்க வேகுவோன் றனக்கிதன் வளமை சென்று வேடன் முன் கண்டுரை செய்யத் திருந்து காதநான் குட்பட வகுத்துக் குன்று போலுமா மதில் புடை போக்கிக் குடியிருத்தின ' கொள்கையின் விளங்கும்