பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

சோழர் சரித்திரம்

________________

கரிகாலன் 53 என்னும் பெரிய புராணச் செய்யுளால் அறியப்படுகின்றது. கச்சி நாற்காத அளவினதென்பதும், மலைபோல் உயர்ந்த மதில் சூழ்ந்ததென்பதும் இச்செய்யுளால் விளங்குகின்றன. அஃது அகழியாலும் மதிலாலும் சூழப்பட்டிருந்ததென மணிமேகலையும் கூறுகின்றது. மற்றும் காவிரிப்பூம்பட் டினத்தின் பல்வேறு வீதிகளும், பற்பல தொழில் செய்வார் இருப்பிடங்களும் சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டிருத்தல் போன்றே காஞ்சியின் வீதிகளும், குடியிருப்புக்களும் மணிமேகலையிற் கூறப்பட்டிருக்கின்றன. இவ்விரு காப்பிய ஆசிரியர்களும் இத் தலைநகரங்களை நேரிற் பார்த்திருத்தல் ஒருதலையாகலின் இவைகளைப்பற்றி அவர்கள் கூறுவதிற் சிறிதும் பிறழ்ச்சி யிருக்கக் காரணமில்லை. இரண்டிலும் காணப்படும் இவ்வொற்றுமையானது இவ்விரு நகரங்களையும் கரிகாலன் திருத்தியமைத்தனன் என்பதனையே வலியுறுத்து கின்றது. இன்னும், கரிகாலனே தொண்டைமண்டலத்தை இருபத்து நான்கு கோட்டங்களாகப் பகுத்தனன் என்றும், பலவிடங்களிலுள்ள உழுதொழில் புரியும் வேளாளரை அங்கே குடியேற்றினன் என்றும், கச்சியிற் காமகோட்டத் திருப்பணி செய்தனன் என்றும் கூறுகின்றனர். இக்கூற்று கட்கும் சிற்சில ஆதரவுகள் உள்ளன. "நாடெங்குஞ் சோழன் முனங் தெரிந்தே யேற்று நற்குடி நாற்பத்தெண்ணா யிரம் எனச் சேக்கிழார் புராணத்துக் கூறியிருப்பது கரிகாலன் வேளாளரைக் குடியேற்றியதையே குறிப்பதாகல் வேண்டும். இங்ஙனம் தொண்டை நாட்டைச் சீர்படுத்திய சோழன் கரிகாலன் அந்நாட்டினைத் தொண்டைமான் இளந்திரையன் தனக்குப் பிரதிநிதியாக இருந்து ஆண்டு வரும்படி செய்தனன் என்று கருதுவது பொருத்தமாகத் தோன்றுகிறது.