பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

சோழர் சரித்திரம்

________________

54 சோழர் சரித்திரம் இனி, சோணாட்டிலுள்ள அழுந்தூர், இடையாறு, கழார் என்னும் பதிகளை இவனோடு இயைபு படுத்தி அகநானூற்றிலே பாணர், நக்கீரர் முதலிய நல்லிசைப் புலவர்கள் பாராட்டி யிருத்தலின் இவனால் அப்பதிகள் சிறப் பெய்தி யிருக்கவேண்டுமென்று கருதலாகும். இங்கனமாக உறையூர், காவிரிப்பூம்பட்டினம், காஞ்சி என்னும் நகரங் களையும், பல ஊர்களையும் திருத்தமுறப் புதுக்கிய வளவர் பெருமான் பல கோயில்கள் எடுப்பித்தும், திருவிழாக்கள் செய்வித்தும், கல்விக்கழகங்கள் நிறுவியும், நீதிமன்றங்கள் ஏற்படுத்தியும், கிராம சபை (பஞ்சாயத்து)கள் தோற்று வித்தும் பலவாற்றானும் நாட்டிற்கு நலஞ் செய்தனன் என்று கருத ஏதுக்கள் உண்டு. இவை பின் கூறப்படும் வேறு சில சோழர்க்கும் பொதுவாவன ஆகலின், இந்நூலின் இறுதியிற் கூறப்படும். இவனது ஆட்சிக் காலத்திலே ஒவ்வோராண்டி லும் இளவேனிற் பருவத்தில் இருபத்தெட்டு நாள் நடை பெற்ற பெரிய திருவிழா இந்திரவிழாவாகும் என்றும், புதுப் புனல் விழா இவனால் மிக்க சிறப்புடன் கொண்டாடப்பெற்ற தென்றும் இங்கே கூறுதல் அமையும். இவன் புனல்விழாக் கொண்டாடிய சிறப்பு, விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் தண்பதங் கொள்ளுந் தலைகாட் போல எனச் சிலப்பதிகாரத்துக் கடலாடு காதையில் உவமையாகக் கூறப்பட்டிருப்பதனால் வெளியாகும். இனி, புதுப்புனல் விழவோடும் இவனோடும் இயை புடைய மற்றொரு வரலாறும் ஈண்டே அறியற்பாலது. அது, கரிகால் வளவனுக்கு ஆதிமந்தி எனப் பெயரிய புதல்வி யொருத்தி இருந்தனள் : இவள் நல்லிசைப் புலமை வாய்க் தவள் ; கற்பிற் சிறந்தவள் ; இவள் கணவன் சோ