பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

சோழர் சரித்திரம்

________________

கிள்ளிவளவன் மூவர் இருந்தனர். இவனுக்கு அட்மானாகிய இரும்பிடர் தலையாரும் நல்லிசைப் புலவர் ;தல்வரும் புதல்வியும் புலமை சான்றவர். எனவே, இவல் குடும்பமும் சுற்றும் மெல்லாம் தெண்டிரை யமிழ்து கொவ்வாத் தீஞ்சுவை கெழீஇய செவ்வித் தண்டமிழ் இன்பமா இத்தகையன என்பது போதரும். வீரம், வண்மை , நீதி, சூதுச்சித்திறன், ஆட்சி வன்மை முதலியவற்றுக்கெல்லாம் எடுத்துக்காட்டாகும் பெருமையுடைய கரிகாற் பெருவளத்தான் என்னும் இவ் வேந்தர் பெருமான் புவியிலே தன் பருவுடலோடு விளங்கிய காலம் கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதி யென்பது பல வாற்றானும் வலியுறுகின்றது. 10. கிள்ளிவளவன் இவன் கரிகாலனை யடுத்துக் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தானாகத் தெரிதலானும், இவன் தம்பியாகிய நலங் கிள்ளிக்கு வழங்கும் சேட் சென்னி என்னும் பெயர் பாட்டன் பெயராக இருத்தல் கூடுமாகலானும் இவ்வாசன் கரிகால் வளவன் மகனென்று கருதப்படுகின்றான். நலங்கிள்ளி, மாவளத்தான் என்னும் இருவரும் இவன் தம்பியர் என்பது பின் காட்டப்பெறும். புகாரில் இருந்தவனாக மணிமேகலையிற் கூறப்படுகின்ற சோழ மன்னன் இவனே. அக்காப்பியத்தி லிருந்து இவனுக்கு நெடுமுடிக்கிள்ளி, மாவண்கிள்ளி, வடி வேற்கிள்ளி என்னும் பெயர்களும் வழங்கினவென்பதும், இவனது தேவியாகிய சீர்த்தி என்பாள் மாவலி வமிசத்திற் பிறந்தவள் என்பதும், இவள் வயிற்றுப் பிறந்தோன் உதய குமான் என்பதும் அறியப்படுகின்றன. இவன் நாக நாட் டாசனாகிய வளைவணன் என்பானது மகளாகிய பீலிவளையை