பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

சோழர் சரித்திரம்

________________

53 சோழர் சரித்திரம் மணந்து ஓர் மகனைப் பெற்ற செய்தியும் அதிலிருந்து தெரி கிறது. பல புலவர்கள் இவனைப்பாடிய புறப்பாட்டுக்களிலிருந்து இவன் மிக்க வீரமும், வண்மையும் உடையவனென்றும், புலவர்கள் தன்னை நெருங்கிக்கூறும் அறிவு ரா உக்களைச் செவி மடுத்து அந்நெறி யொழுகுதலால் தன் குறைகளைப் போக்கி வந்தனன் என்றும் தெரிகிறது. ஆலத்தூர்கிழார் என்னும் புலவர் இவன்பாற் பரிசில் பெற்றுச் செல்லும்பொழுது, எம்மை நினைத்து வருவீரோ' என இவன் வினவா நிற்புழி , அவர், ' பாணர்க்குக் காவில் லாத உள்ளத்துடன் இனிய மொழி கூறி அமலைக்கொழுஞ் சோறு அளித்து அகலாச் செல்வம் முழுதுஞ் செய்தருளிய எம் வேந்தனாகிய வளவன் வாழ்வானாக என்று காலையந்தியும் மாலையந்தியும் நினது பெருமை பொருந்திய தாளைப் பாடே ாையின் ஆதிக்கன் தோன்று தலறியான் ; யானோ எளியேன் ; இவ்வுலகின்கண் சான்றோர் செய்த நல்வினையுண்டாயின், இமயமலையிலே திரண்டு கொண்டல்கள் சொரிந்த மழைத் துளியினும் பலகாலம் வாழ்வாயாக' என்று கூறினர். இவ் வரசன் சோனது கருவூரை ஒருகால் முற்றுகையிட்டிருந் தான். சோனோ இவனோடு எதிர்த்து மலையும் ஆற்றலின்றி மதிலையடைத்துக்கொண்டு உள்ளிருந்தனன். அடைமதிற் பட்டிருக்கும் நகரத்து மக்கள் எய்தும் இன்னல் அளவிடற் கரிய தன்றே? அதனை யறிந்தார் அருண்மிக்க புலவராகிய இவ்வாலத்தூர்கிழார் ; உடனே வளவனிடத்துச்சென்று, அவனை நோக்கி, 'அரசே, காக்கள் தோறும் காவன் மாங்களை வெட்டும் ஓசை தன் ஊரிலே தனது கோயிற்கண் சென்று ஒலிக்கவும் அவ்விடத்து மானமின்றி இனிதாகவிருந்த வேந்த னுடன் இவ்விடத்து நின் முரசு ஒலிக்க நீ பொருதாயென்பது