பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

சோழர் சரித்திரம்

________________

கிள்ளிவளவன் 591 கேட்டார் நாணுந் தன்மையுடையது; நீ அவனைக் கொல்வா யாயினும் கொல்லாது ஒழிவாயாயினும் அவற்றால் நினக்குண் டாகும் உயர்ச்சியை யாம் கூறவேண்டுவதின்று ; நீயே எண்ணி யறிவாய்' என்னுங் கருத்துள்ள ஓர் பாட்டினைக் கூறினர். அதனைக் கேட்டு வளவனும் போரொழிந்து மீண்டனன். வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர் இவ்வரசனைப் பாடிய செவியறிவுறூஉ உயர்ந்த கருத்துக்கள் பலவுடையது. 'பெரும, தமிழ் நாட்டிற்குரிய முரசு முழங்குதானையை யுடைய மூவேந்தருள்ளும் அரசென்று சிறப்பித்துச் சொல்லப் படுவது நின்னுடைய அரசே ; ஞாயிறு நான்கு திக்கினும் தோன்றினும், வெள்ளிமீன் தென்றிசைக்கட் செல்லினும் அழகிய காவிரி இடையறாது நீர் பெருகிவந்து பல கால்களால் ஊட்டுதலின் தொகுதி கொண்ட வேற்படையின் தோற்றம் போலக் கரும்பின் வெளிய பூக்கள் அசையும் நாடென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது நின்னுடைய நாடே ; அத் தகைய நாடு கெழு செல்வத்தையுடைய பீடுகெழு வேந்தே, நினக்குரியன சில சொல்வேன் ; என் வார்த்தைகளைக் கேட் பாயாக ; அறக்கடவுளே ஆட்சி புரிவது போல் செங்கோலால் ஆராயும் ஆராய்ச்சியையும், முறை கேட்க வேண்டுங் காலத்து எளிய செவ்வியையும் உடையோர் மழை வேண்டுங் காலத்து அதனைப் பெற்றோராவர் : வானை முட்டிய நினது பரந்த வெண்கொற்றக் குடையானது வெயிலை மறைத்தற்குக் கொண்டதோ எனின், அன்று ; அது, வருத்தமுற்ற குடியை நிழல் செய்தல் காரணத்தாற் கொள்ளப்பட்டது ; போர்க் களத்திலே வருகின்ற மாற்றார் படையை எதிர் நின்று பொறுத்து அது சரிந்து மீளும் புறக்கொடைகண்டு ஆச வாரித்து நின் படைவீரர் தரும் வெற்றியும் கலப்பை நிலத் தின்கண் உழுத சாலிடத்து விளைந்த நெல்லினது பயனே :