பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

சோழர் சரித்திரம்

________________

60 சோழர் சரித்திரம் மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கையல்லன செயற்கையிற் றோன்றினும் இவ்வுலகம் காவலரைப் பழித் துரைக்கும்; அதனை அறிந்தாயாயின், நீயும் நொதுமலாளரது உறுதியில்லாத மொழியைக் கொள்ளாது உழுவார் குடியைப் பாதுகாத்து அதனால் ஏனைக்குடிகளையும் புரப்பாயாயின் நின் பகைவர் நின் அடியைப் போற்றுவாராவர்' என்னும் பொருள் கள் அதிற் கூறப்பட்டுள்ளன. இப்பாட்டினைக்கேட்ட கிள்ளி வளவன் அப்புலவரால் இறுக்கப்படாதிருந்த அவருடைய நிலவரி முழுதையும் விடுவித்துவிட்டான். ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர், "நீ, உடன்று நோக்கும் வாயெரி தவழ நீ, நயந்து நோக்கும் வாய்பொன் பூப்ப செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்டிங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை என்று பாடுவாராயினர். மாறோகத்து நப்பசலையார் என்னும் புலவர், நீ, தன்னை யடைந்த புறவின் பொருட்டுத் துலைபுக்க செம்பியன் மாபி னுள்ளாயாதலால் இரந்தோர்க்கீதல் நினக்கு இயல்பாவ தன்றிப் புகழ் அன்று ; வானத்திலே தூங்கெயிலை யழித்த நின் முன்னோரை நினைப்பின் ஈண்டுள்ள பகைவரைக் கொல்லுதலும் நினக்குப் புகழ் அன்று ; சோழரது உறந்தை அவையத்து அறம் நின்று நிலைபெற்றதாதலால் முறைமை செய்தலும் நினக்குப் புகழ் அன்று ' என்று கூறினர். மணிமேகலையிலுள்ள ஓர் வரலாறு முறை செய்தலில் இவனுக்கிருந்த உயர்ந்த கருத்தைப் புலப்படுத்துகிறது. இவன் மைந்தனாகிய உதய குமான் பௌத்த சமயத்தைச்