பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

சோழர் சரித்திரம்

________________

கிள்ளிவளவன் 61. சார்ந்து துறவு பூண்டிருந்த மணிமேகலை என்னும் தவ மகளைக் காதலித்து அவளைக் கைப்பற்றுவான் இரவிற் சென்ற பொழுது ஓர் விஞ்சையனால் வெட்டுண்டிறந்தனன். இச் செய்தி அந்நகரத்திருந்த முனிவர்களால் இவனுக்கு அறி விக்கப்பட்டது. இதனைக் கேட்டலும் இவ்வளவன், தன் அமைச்சனும் படைத்தலைவனுமாகிய சோழிய வேனாதியை நோக்கி, 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றாகும்; தன் மகனைப் புவியிலே கிடத்தி அவன்மீது தேர்க்காலைச் செலுத்தி முறை செய்த அரசர் பிரான் வழியில் ஒரு தீவினையாளன் பிறந்தானென்பதை மற்றை அரசர்கள் கேட்கு முன்னம் அவனைப் புறங்காடடை விக்க' என்று கூறினன். தன் மகன் இறந்ததற்குச் சிறிதும் துயருறாது இவன் கூறிய இம்மொழிகள் முறையினை முட்டா மற் செலுத்தும் பண்பு இம் மாபினர்க்கு இயல்பாதலைக் காட்டுகின்றன. எனினும், குற்றமற்றவளாகிய மணி மேகலையை இவன் சிறைப்படுத்தியதும், இவனது தேவி வஞ்சத்தால் அவளைத் துன்புறுத்தத் தொடங்கியதும் இவர் கட்கு இழுக்கே. கதாநாயகியான மணிமேகலை இராசமா தேவிக்குப் பௌத்த சமய உண்மைகளை அறிவுறுத்தனளாகக் கூறக்கருதிய சாத்தனார் அதற்கொரு வாயிலாகக் கதையை இங்கனம் அமைத்துக்கொண்டனர் எனலுமாம். புறப்பாட்டிற் காணப்படுகின்ற ஒரு செய்தி இம் மன்னற்குப் பெரிய மறுவினையுண்டாக்குவ தென்பதில் ஐயமில்லை. அச்செய்தியாவது, வரையாத வள்ளன்மையால் உலக முள்ளளவும் அழியாத புகழினைப் படைத்த கடையெழு வள்ளல்களில் ஒருவனும், திருக்கோவலூரை அரசிருக்கை யாக வுடையவனுமாகிய மலையமான் திருமுடிக்காரியின் மிக்க இளமையுடைய மக்களைப் பற்றிக் கொணர்ந்து யானைக்காலில்