பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

சோழர் சரித்திரம்

________________

62 சோழர் சரித்திரம் இடறுவிக்கத் துணிந்தமையே யாகும். இவன் அங்கனம் செற்றங் கொண்டமைக்குக் காரணம் இதுவாகுமென்று கருதப்படுகிறது ; கிள்ளிவளவன் புகாரிலிருந்து அரசாண்ட பொழுது நெடுங்கிள்ளி என்னும் சோழமன்னன் உறை யூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்டுவந்தனன். கிள்ளிவள வனுக்கும் நெடுங்கிள்ளிக்கும் பகைமை மூண்டது. கிள்ளி வளவன் தம்பியும் இளவரசனுமாகிய நலங்கிள்ளி நெடுங் கிள்ளியுடன் பல இடங்களிற் பொருது, முடிவில், காரியாறு என்னுமிடத்தில் நடந்த போரிலே அவனைக்கொன்றனன். அப்பொழுது நெடுங்கிள்ளிக்குத் துணையாக அங்கு வந் தெதிர்த்த சேரபாண்டிய மன்னர்களும் நலங்கிள்ளியால் முறி யடிக்கப்பட்டனர். காரியாற்றில் இவை நிகழ்ந்தமை, நெடுங் கிள்ளியானவன் காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி என வழங்கப்படுதலானும், "வஞ்சியி னிருந்து வஞ்சி சூடி தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர் சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை ஆர்புனை தெரியல் இளங்கோன் றன்னால் காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி எனக் கிள்ளிவளவன் மணிமேகலையிற் கூறப்படு தலானும் புலனாகின்றது. இங்ஙனம் நெடுங்கிள்ளியை வென்ற பின்பு உறையூரும் கிள்ளிவளவற்கும் நலங்கிள்ளிக்கும் உரிய தாயிற்று. அதனாற்றான், " பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே எனக் கிள்ளிவளவனும்,