பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

சோழர் சரித்திரம்

________________

கிள்ளிவளவன் "உறந்தை யோனே குரிசில் என நலங்கிள்ளியும் புறப்பாட்டுக்களிற் கூறப்படுகின்றனர். இது நிற்க.-- திருமுடிக்காரியானவன் பெருவள்ளலாக விளங் கியதன்றி, ஒப்பற்ற வீரனாகவும் திகழ்ந்தான். அதனாலே மூவேந்தர்கள் தமக்குள்ளே போர் போங்க காலையில் கரூரிக்குப் பெரும்பொருள் கொடுத்து அவனைத் தாக்குப் படைத்துணை யாகும்படி தனித்தனி வேண்டுவர். காரியும் தளர்ந்தவர் பக்கல் துணையாகச்சென்று பொருது, தான் பெற்ற பொரு ளனைத்தையும் பரிசிலர்க்கு வழங்கிவிடுவான். இதனை, "வீயாத் திருவின் விறல்கெழு தானை மூவரு ளொருவன் றுப்பா கியரென எத்தினர் தரூஉங் கூழே நுங்குடி வாழ்த்தினர் வரூஉம் இரவல ரதுவே " - புறம், 122 என்பதனால் அறியலாகும். இச்செயல் காரிக்கே யன்றி அவன் குடியிற் பிறந்தார் பிறர்க்கும் இயல்பாயிருந்தது. காரியானவன் நெடுங்கிள்ளிக்குத் துணைபுரிந்தமையாலோ, அவன் மக்களுளொருவன் நெடுங்கிள்ளியின் மகனுக்கு அரசு நிலையிட முனைந்தமையாலோ கிள்ளிவளவனுக்கு மலையமான் மக்களிடத்துத் தகுதியில்லாத சீற்றமுண்டாயது. இக் கொடுஞ் செயல் நிகழ்வுழி அங்கு வந்திருந்த கோவூர்கிழார் என்னும் புலவர் கண்டு பதைபதைத்து இரங்கி, அரசனை நோக்கி 'நீதான், ஓர் புறாவின் அல்லலன்றியும் பிறவுயிர் களுக்குற்ற துன்பத்தையும் தீர்த்தற்கு உயிர்க்கொடை பூண்ட சோழன் மாபிலுள்ளாய் ; இவர் தாம், அறிவால் உழு துண்ணும் கற்றோாது வறுமைத் துன்பத்திற்கு அஞ்சித் தம் முடைய பொருளைப் பகுத்துண்ணும் தண்ணிய அருளையுடை யாரது மரபிலுள்ளார்; இவர் இப்பொழுது களிற்றைக்