பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

சோழர் சரித்திரம்

________________

64 சோழர் சரித்திரம் கண்ட வியப்பால், முன்பு வெருவியழுத அழுகையை மறந் திருக்கின்ற சிறு பிள்ளைகள் ; இம்மன்றினை வெருண்டு நோக்கி முன்பு அறியாத புதியதோர் வருத்தத்தையும் உடையர் ; இதனைக் கேட்டனையாயின் நீ விரும்பியதைச் செய்க ' என்னும் பொருளமைந்த ஓர் பாட்டினைக் கூறினர். இதனைக்கேட்ட கிள்ளிவளவன் தன் குற்றத்திற்கு நாணி, அப்பிள்ளைகளைக் கொல்லாது விடுத்தனன். வளவன் முதலிற் செய்யத் துணிந்த காரியம் பற்றி அவனை எத்துணையும் எள்ளு தல் பொருந்துமேனும், பின்பு சான்றோர் சொற்கேட்டு அதனைச் செய்யாதொழிந்தமை கருதி அவனைப் பாராட்டவே வேண்டும். இனி, கிள்ளிவளவன் தான் கருவூரை முற்றுகையிட்டுச் சோனை வென்றதும், தன் தம்பியால் நெடுங்கிள்ளியையும், சோ பாண்டியர்களையும் வென்றதுமன்றி, தான் மதுரையிற் சென்று பழையன் மாறன் என்பானை வென்றானென்று ஓர் அகப்பாட்டினால் தெரிகிறது. இவன் கூடல் மறுகிலே பழையன்மாறனை வென்ற பொழுது கோதைமார்பன் என்பான் பேருவகையுற்றனன் என்றும் அப்பாட்டுக் கூறுகிறது. - இனி, இவனுக்குச் சிறுகுடிகிழான் பண்ணன் என்பான் சிறந்த நட்பாளனாயிருந்தான். பண்ணன் மீது இவ்வாசர் பெருந்தகை பாடிய செய்யுளொன்று புறநானூற்றில் உள்ளது. அச் செய்யுளிலிருந்து பண்ணனுடைய ஈகைத் தன்மையும், அவன்பால் வளவன் பூண்ட நட்பின் பான்மையும், வளவனது கவிபாடுந்திறலும் நன்கு விளங்கும். அச்செய்யுள், "யான்வாழு நாளும் பண்ணன் வாழிய பாணர் காண்கிவன் கடும்பின திடும்பை யாணர்ப் பழுமரம் புள்ளிமிர்ந் தன்ன ஊணொலி யாவந் தானுங் கேட்கும்