பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

சோழர் சரித்திரம்

________________

கிள்ளிவளவன் பொய்யா வெழிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வற்புலஞ் சேரும் சிறு நுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச் சோறுடைக் கையர் வீற்றுவீற் றியங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும் மற்று மற்றும் வினவுதுந் தெற்றெனப் பசிப்பிணி மருத்துவ னில்லம் அணித்தே சேய்த்தோ கூறுமி னெமக்கே " என்பது பண்ணனிடத்திற் பரிசில் பெற்று மீண்டு வருகின்ற பாணனொருவன் அவன்பாற் பரிசில் பெறுதற்குச் சுற்றத் துடன் வந்து கொண்டிருக்கிற பாணனை வழியிற் கண்டு, அவன் வினாவியதனைக் கேட்டு, தன் பக்கப்பாணரை நோக் கிக் கூறியதாகப் பண்ணனது ஒப்பற்ற ஈகை புலப்படப் பாடப் பெற்றது இப்பாட்டு. இதன் பொருள் : 'பழுத்த மரத்தின் கண்ணே புள்ளினம் ஒலித்தாற்போன்ற ஊணா லுண்டாகிய ஆரவாரத்தானுங் கேட்கும் ; மழை பெய்யுங் காலத்தை நோக்கித் தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தை யடையும் சிற்றெறும்பின் ஒழுக்குப்போலச் சோற் றுத் திரளையைக் கையிலுடையராய் வெவ்வேறு வரிசையாகச் செல்கின்ற பெரிய சுற்றத்தோடுங் கூடிய பிள்ளைகளையும் காண்கின்றோம் ; அங்கனம் கேட்டும் கண்டும், எம் பசி வருத்தத்தால், பசி நோய் தீர்க்கும் மருத்துவனது மனை அணிமையிலுள்ளதோ செய்மையினுள்ளதோ கூறுங்கள் எனப் பின்னும் பின்னும் விரைந்து வினவுகின்றேம் என்று இப்பாணன் கூறுகின்றான் ; பாணரே இப்பரிசிலனது சுற்றத் தின் வறுமையைக் காண்பீராக; இங்கனம் என் வறுமையும் தீர்த்து இவன் வறுமையும் தீர்க்கவிருக்கின்ற பண்ணன் யான் உயிர் வாழு நாளையும் பெற்று வாழ்வானாக' என்பது. சோ . 5