பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

சோழர் சரித்திரம்

________________


கிள்ளிவளவன் 67 லும் படையினையும், திண்ணிய தேரினையுமுடைய வளவனைக் கொண்ட கூற்று, தன் மனத்துளே கறுவுகொண்ட தாயினும், எய்தி நின்று கையோடு மெய் தீண்டி வருத்திற்றாயினும் அதற்குப் பிழைத்தல் இல்லை; அது, பாடுவார்போலத் தோன்றி நின்று கையாற்றொழுது வாழ்த்தி இரந்து உயிர் கொண்டதாகல் வேண்டும்' என்றும்; மாசாத்தனார், ' ஈர மில்லாத கூற்றமே, நீ மிகவும் அறிவிலியாகின்றாய்; வாட் போரில் வல்ல வீரரும் யானையும் குதிரையும் போர்க்களத் தில் மாய எதிர்நின்று கொன்று நாடோறும் நினது பசியைத் தீர்த்தற்கு ஊட்டிய வசையற்ற வலிமையையுடைய வளவனை நீ கொண்டாயாயின் இனி நின் பசியைப் போக்குவோர் யார் சொல்வாயாக ; விரகு இல்லாமையால் மேல் விளைந்து பயன் படும் விதையைக் குத்தியுண்டாய் ; நினக்கு யான் கூறிய இவ்வார்த்தை பிறழாத மெய்யாதலை இன்னமும் காண்பை' என்றும் கையறு நிலையாகக் கூறினர். -முடவனாரோ, சுற்றத்தார் இறங்கிக் கூறும் ஆனந்தப் பையுள் என்னும் துறையில் வைத்து, ' கலம் வனையும் வேட் கோவே, கலம் வனையும் வேட்கோவே, இருள் ஓரிடத்தே செறிந்து நின்றாற் போலத் திரண்ட புகை வானின்கட் சென்று பொருந்தும் சூளையையுடைய மூதூரிற் கலம் வனையும் வேட் கோவே, நில முழுதும் பாப்பிய பெரிய தானையினையும், புலவர் புகழ்ந்த பொய்யாத நல்ல புகழினையும் உடைய செம்பியர் மருமகனாகிய வளவன் தேவருலகத்தை அடைந்தானாகலான், அத்தன்மையுடையோனைக் கவிக்கும் இடமகன்ற தாழியை நீ வனைய விரும்பினாயாயின் பெரிய நிலவட்டம் திகிரியாக

  • பழைய காலத்தில் இறந்தவர் உடலைத் தாழியாற்கவித்து அடக்கம் செய்தல் வழக்கம்; இது முதுமக்கட்டாழி எனப்படும்.