பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

சோழர் சரித்திரம்

________________

68 சோழர் சரித்திரம் மேருமலை மண்ணாக நினக்கு வனைய இயலுமோ ; இயலாமை யின் எத்தன்மையை யாகுவை ; நீ இரக்கத்தக்காய் என்று கூறினர். இங்கனம், கிள்ளிவளவன் துஞ்சியபின் பாடிய இச்செய்யுட்களிலிருந்து, நல்லிசைப் புலவர்கட்கு அவன் மேல் எத்துணை அன்பிருந்ததென்பது நன்கு புலனாகின்றது. 11. நலங்கிள்ளி இவன் கிள்ளிவளவனுக்குத் தம்பி யென்பது 'சிலைக் கயல் நெடுங்கொடி ஆர்புனைதெரியல் இளங்கோன் றன்னால் காரியாற்றுக்கொண்ட மாவண் கிள்ளி ' எனக் கிள்ளிவளவன் மணிமேகலையிற் கூறப்படுவதால் அறியலாவது. இவன் தம்பி மாவளத்தான் என்பது 43-ம் புறப்பாட்டின் கீழுள்ள பாடி னோர் பாடப்பட்டோரைக் குறிக்கும் தொடரில், 'சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும்' என்றிருப்பதாற் பெறப் படுகின்றது. இவன் நலங்கிள்ளி) சேட்சென்னி, புட்பகை, தேர்வண் கிள்ளி என்னும் பெயர்களானும் கூறப்படுவன். இவன் ஆவூரிலும் உறையூரிலும் முற்றுகையிட்டு நெடுங் கிள்ளியை வென்றதனோடு, அவனைக் காரியாறு என்னுமிடத் திற் பொருது கொன்றான். அவ்விடத்திற்றானே சோ பாண்டி யர்களையும் வென்று அவர்கள் கொடியைக் கைப்பற்றினான். இவன் பாண்டி நாட்டிலுள்ள ஏழு அரண்களை வென்று கைப் பற்றி, அவற்றின்கண் தனது புலிக்கொடியை நாட்டினான் என்று 33-ம் புறப்பாட்டினால் தெரிகிறது. இவன் அள விடற்கரிய தனது தானையுடன் வலமாகப் புறப்பட்டு முன் பாண்டியனையும், பின் சேரனையும் வென்று அவ்வளவில் அமையானாய் வடநாட்டரசர்களையும் வென்று வலியழித்து மீள்வன் எனப் புலவர்கள் இவனைப் பாராட்டியுள்ளார்கள்.