பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

சோழர் சரித்திரம்

________________

நலங்கிள்ளி 69 "தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசைய இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக் கடையோர், விடுவாய்ப் பிசிசொடு சுடுகிழங்கு நுகர நிலமலர் வையத்து வலமுறை வளை இ வேந்துபீடழித்த எந்துவேற் றானையொடு " என ஆலத்தூர்கிழார் இவனது படைப்பெருமையையும், வெற்றித் திறத்தையும் அழகாகப் புனைந்துரைத்தனர். முன் செல்லும் தூசிப்படையோர் பனையின் நுங்கினை உண்ண, இடையே செல்வோர் அதன் பழத்தினை நுகா, பின் செல் வோர் பனையின் சுட்ட கிழங்கினை உண்ண இங்ஙனம் உல கத்து வலமுறையாகச் சூழ்ந்து மாற்றாசரை வலிகெடுத்த சேனையோடு ' என்பது இதன் பொருள். இக்கருத்தே கோவூர்கிழாபால் வேறு வகையாகக் கூறப்பெற்றுளது. அவர், 'கீழ்கடல் பின்ன தாக மேல்கடலின் வெள்ளிய அலை நின் குதிரையின் குளம்பை யலைப்ப வலமாக முறையே வருதலுமுண்டாமென்று வடநாட்டுள்ள அரசுகள் கலங்கி நெஞ்சிலே அவலம் மிகத் துயிலாத கண்களையுடையவாயின' என்ற னர். இங்கனம் ஒப்பற்ற வீரனாகிய இம்மன்னன் புலவர்களை நன்கு மதித்து, அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அவ்வாறொமுகி வந்தனன் என்று தெரிகிறது. இவன் உறை யூரை முற்றுகை யிட்டிருந்தபொழுது, கோவூர்கிழார் என் னுஞ் சான்றோர் ஓர் பாட்டியற்றிக் கூறி, இவனையும் இவன் பகைவனாகிய நெடுங்கிள்ளியையும் சந்து செய்வித்தார். அவ்வரிய செய்யுள், " இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன் கருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன் நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே, நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே